வேலுண்டு மயிலுண்டு
வினை தீர்க்க என்
வேலவன் உண்டு,
வெள்ளை உள்ளம்
கொண்டவளின்
வேண்டுதளுக்கு
செவி சாய்க்க செம்மையாய்
என் சேயோன் உண்டு!-
மாயோன் ஈந்த மதுர வரகவிக்கு
சேயோன் வேல் வந்து துணை நிற்க
வானோன் ஐயை வணங்கி யாமே
வருணன் வகைமாரிப்போல் வரிவரியாய் வார்த்தைகள் நன்றே பொழிந்திடவே
கொற்றவை நிற்க கோர்த்த என் சொற்களிலே.
-
சர்வ வல்லமையை ஏற்கவில்லை
சகலத்தையும் ஒன்றினுள் சுருக்கவில்லை
என் பணி உன் கடமை
உன் பணி என் கடமையும் கூட
நீயே நான் நானே நீ
எனக்கு முன் பல யுகங்களில் வாழ்ந்து
வாழவைத்தோரின் ஒரு முகமாக நீ
எனக்குப் பின் உன் முகமாக அப்பணி
செப்பணிடுவார் உலகத்தார்
உலகம் வேறு தேடிச் சென்றாலும்
நல்உள்ளத்தால் இப்பணி தொடரும்
ஒவ்வொருவருக்கும் ஒன்றின் மீது
உறுதியிருப்பதில் நிறைவெனக்கு
இறுதித் துடிப்பென் இதயம் துடிக்கும்வரை இறைவனாக ஆன நல்லோரின் ஆணை காப்பேன் ஆதித்தமிழா-
சேயோனே
செந்தமிழ் காத்த தென்புலத்தாரின் மூத்தோனே
குமரிக்கண்டம் கண்ட குமரனே
குறிஞ்சி நில வேந்தனே
நீ ஆறுமுகமல்ல
மனித குலத்தின் மாண்பைக் கட்டிக் காக்க
உயிர் மடிந்து ஓர் உள்ளமாக உருவாகிய (100)^100 முகமாக உன்னை ஏற்கிறேன்.. உண்மை ஏற்கிறேன்
தணிகையே
தனிநல விருப்பத்தில் உன்போல் எனக்கும் விருப்பமில்லை
ஒரே ரத்தம் ஒன்றைத் தானே விரும்பும்
உன்னிடம் வேண்டுதலில்லை கோரிக்கைகளில்லை
நன்றியுண்டு.. நானாக இப்போது நானிருக்கும் நன்நிலைக்காக நன்றியுண்டு-