நிலவின் அழகு
இரவில் ஒளிந்திருப்பதை
போல...
என்னவனின் அழகை
கரும் தாடிக்குள்
மறைத்தானே...கயவன்
-
ஒரு நபரை காதலித்து
தான் கவிதைகளை
கிறுக்கவேண்டியதில்லை
கவி வரிகளை காதலித்தாலும்
கவிதைகளை கிறுக்கலாம்...-
சிரிக்கும் உதடுகள்
என்பதற்காக
மனதில் வேதனை இல்லை
என்று நினைத்தாயோ...
உள்ளத்தின் வேதனை
உடலோடு மறையட்டும்
என்று மலருதடா இந்த
உதடுகள்...-
அவளின்
நுனிவிரல் தீண்டிட
ஏக்கம் கொண்டாயோ..!!!
இல்லை தாகம் தீர்த்து
கொள்ள துடித்தாயோ..!!
தீர்ந்துவிடுமோ தாகம்
வேர் சாயும் வரை...
மோட்சமும் மறுபிறவி
வேண்டி நிற்கிறதடி....
நின் கர துளி நீருக்கு...-
கடற்கறையினை
அடைய முயலுகிறேன்
ஏனோ சில நினைவுகள்
உள்ளிழுத்து சென்று
மூழ்கடிக்க செய்கிறது..
சில நினைவுகளோ
அலையாய் வந்து
என்னை மீட்டெடுத்து
செல்கிறது..
போராட்டம் என்னவோ
நினைவுக்கடலினுள்
தான்..!!-
என் எதிரில் வர
நேரமில்லாவிடினும்
என்னை
நினைத்துப்பார்க்க
நேரமிருக்கிறதா
என் கள்வனே..-
மேக கீற்றுகளை
களைந்து
இருளதனை
விழுங்கிட
பொற்தாமரை
வானெங்கும்
விரிந்து
விண்மீன்களிடையே
எட்டி பார்த்திட
நின் அழகில் என்னையே
மறந்திட ...இன்னும்
நீளாதோ இந்த முழு
இரவு....-
என்னை காயப்படுத்தவதும்
என்னவ(ளே)னே. ..
அந்த வலிக்கு
நிவாரணம்
அளிப்பதும்
என்னவ(ளே)னே...!!
-