எழுத்துக்களை எவ்வளவு கவனமாக
இணைக்கிறமோ அந்தளவுக்கு
எழுத்தாளராக ஆவதும் கடினமே-
எளிமை வரிகளுக்கு
சொந்தக்காரர் இவர்..
அதிலோ எண்ணிலடங்கா
தனித்துவத்தை ஒளித்து
வைத்து ஏலேலோ பாடும்
இயற்கை தாலாட்டும் கவிஞர்......!!!!!
_ இளங்கவி ஷாலினி கணேசன்-
சிறு சிறு துகள்களாய்
இவர் தீட்டும் கவிதைகளோ
ததும்பி வழியும் காதலில்..
கவிதை சிறிதாயினும்
சிந்தனைகள் பலக்கொண்டு
சிகிச்சை செய்யும்..
முடங்கி கிடக்கும் முட்டாளுக்கும்
இவரது வரிகளே ஊட்டச்சத்து..!!
- இளங்கவி ஷாலினி கணேசன்-
வாசிக்க வாசிக்க
வரிகள் வசப்படும்
வாசகனை திருப்திப்படுத்தும்
எழுத எழுத
எண்ணங்கள் மேம்படும்
எழுத்தாளனை உற்சாகப்படுத்தும்-
எல்லாருக்கும் ஒரு கதை இருக்கு அது வாழ்வு, காதல், பிரிவு, ஏக்கம், சந்தோஷத்தை பற்றி, முன்னேற்றம் பற்றி, கனவுகளை பற்றி இதில் சில கதைகள் வெற்றி கதைகளாகவும், தோல்வியடைந்த கதைகளாகவும் இருக்கும், இது பிறரிடம் திருடிய கதையல்ல, இது ஒவ்வொரு கதாநாயகன், கதாநாயகிகளின் கதை, ஒருவர்மட்டுமே எழுதியது, எழுத்து பிழைகள் அதில் வருவதில்லை...
-
என்னைப்போன்ற
இன்னொரு
பரிமாணத்தோற்றம்
இவள்.
நலம்விரும்பி
சிந்தனைக்காரி
இவளையும்
சாக்கலேட்டுக்கு
பிடிக்கும்.-
நலம் விரும்பி #
புகைப்படகலைஞன் #
சமூக ஆர்வலர் #
ரசனைக்காரன் #
கிரிக்கெட் வீரர் #
எழுத்தாளர் #
வாழ்த்துக்கள் நண்பா !
Vicky 123 @-
உம் தமிழும் தமிழ்கவிதைகளும் அழகு.
உம் காதலும் காதல் கவிதைகளும் அழகு.
உம் அன்பும் கோபமும் அழகு.
உம் எழுத்துக்களும் எழுத்துக்கோர்ப்பும் அழகு.
உம் சீரிய கருத்தும் சீரிய சிந்தனையும் அழகு.
ஆம்!
"அன்புத்தமிழன் ஒரு அழகன்".
உங்களிலிருந்தும்
நிரம்ப கற்றுள்ளேன் அண்ணா.
இன்னமும் புதிய புதிய வார்த்தைகளை
பிரயோகப்படுத்திடுங்கள்.-
இந்த கவிதைகளை கிறுக்குவதால்
எனக்கு என்ன பயன் என்று பலர்
கேட்டார்கள்...
அவர்களுக்கான பதிவு...⬇️⬇️⬇️
-