எனக்கென
யாருமேயில்லை
மஞ்சனத்தி!
எங்கே போனாய்😭💔-
கனவுக் கதவுகளை
தட்டிக்கொண்டிருக்காதே
மஞ்சனத்தி
குழிக்குள்
இறக்கும்போதே
புதையுண்டு போய்விட்டேன்💔-
துரத்தியடிக்கும்
போதெல்லாம்
துருத்தும் உன் அன்பின்
நிழல் நீளுகிறது
மஞ்சனத்தி!
இப்பொழுதெல்லாம்
உரக்கவே அழுகிறேன்
வா வந்து
உரசிச் செல்
-
என் இதழ்கள் சிரிக்கும்
புன்னகையாக நீ இருக்க வேண்டும்.
என் விழிகள் காணும்
பார்வையாக நீ இருக்க வேண்டும்.
என் மொழிகள் பேசும்
வார்த்தைகளாக நீ இருக்க வேண்டும்.
என் நினைவுகள் ஏங்கும்
நிஜங்களாக நீ இருக்க வேண்டும்.
என் மனம் எண்ணும்
மகிழ்ச்சியாக நீ இருக்க வேண்டும்.
என் வலிகள் மறக்கும்
மாறுதலாக நீ இருக்க வேண்டும்.
வாழ்வின் இறுதிவரை
எனக்கென நீ மட்டும் வேண்டும்.
ய மு. கஸ்தூரி கிருபா
-
தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் தனதான
பலப்பல தோற்றம் பலப்பெரும் நாற்றம்
பழக்கமும் மாற்றம் எதற்காக
நசுங்கிய வாழ்வும் கசங்கிய வாழ்வும்
பொசுங்கிய வாழ்வும் எதற்காக
சுழல்கிற காற்றும் சுழல்கிற நீரும்
பிறப்புகள் ஊற்றைக் குறித்தாகும்
கலங்கிய நீரும் கலங்கிய சேறும்
தனித்தனி யாகும் ஒருநாளில்
குளிர்மலர் மீதில் வசப்படும் கோலம்
சிறைப்படும் காலம் மறவாதே
பணம்புகழ் மீதும் வசப்படும் போதும்
மனக்குறை காணும் தவறாதே
பிறப்பதும் தோன்றும் இறப்பதும் ஊன்றும்
நலம்தரும் ஆற்றல் அடைவாயே
அருட்குடை பாலன் பொருட்கொடை வேலன்
வரங்களில் சீற்றம் துடைப்பாயே...
_மொ.ப.பார்த்தீபன்...-