என்னவளின் எதார்த்தமான அணைப்பு இன்று நிகழ்ந்ததுவே ....
பேரின்பம் கொண்டேன் நானடி.......
தொலைந்த இத்தனை ஆண்டுகளின் பிரிவை ஒரு நொடிகள் தகர்ததுவே.....
பலநாள் காணாத ஒன்றை நாம் உணர்ந்தோம் "ஆம்" அதே நட்பின் உச்சம் தொட்ட நம் பிரிதலின் புரிதலில்.......
இருப்புக் கொள்ளவில்லை அந்த பகுதி நேரம் எண்ணி எண்ணி மகிழ்ந்து தருணம் அதுவே........
புன்னகையோடு சொல்கின்றேன்
மறைவான ஓர் இடம் தான் இருப்பினும்
மறவாத நம் நட்பின் ஆழம்....
தோழியே என்றும் நம் நினைவுகளில்......
_கஸ்தூரி_
-
✍️ஒரு நிமிடத்தில் பலக்கவிதைகள் எழுது... read more
நீயும்......
நானுமாக.....
நொடிகள் கழிந்த அந்த
நாழிகையை மன்றாடிடும்
நினைவுகள் தானே
நம் மனம் இன்று ..............
-
அவனுக்காக.........
அவனற்ற என் இரவுகள்,
பொழிவற்ற பௌர்ணமியாக.....
வாசமிழந்த மலர்களாக.....
வண்ணங்களற்ற நிரங்களாக.....
உருவமற்ற ஓவியமாக......
வார்த்தைகளற்ற மௌனங்களாக...
இதழ்களற்ற புன்னகையாக......
-
மறைக்கப்பட்ட என் மனம்,
மன்றாடிடும் மன்னவன் அற்ற தருணங்களில்
மரணம் தீண்டும் சுவடாக.......-
உந்தன் ஸ்பரிசம் தீண்டியதாலே
எந்தன் உயிர் கரைகிறது இப்பொழுது......-
நினைவில் இருப்பது நிஜமா? அல்ல
என கனவுகளா? அல்ல
என் அதிகபட்ச ஆசைகளா? அல்ல
என் நிறைவேற ஏக்கமா?
புரியாத புதிராகவே
என் மனம் இன்றும்...........-
நிலை நிறுத்திக் கொள்ள எவ்வளவோ முயற்சித்தாலும் தோற்கின்றேன்
என் மறதி கொண்டே நினைவினால்.......-
என்னை நானே ஏமாற்றிக் கொண்ட தருணம் அது........
"இதுவும் கடந்து போகும்"
என்றாவது ஒரு நாள் களைந்தும்
போகும் என்று
என்னை நானே ஏமாற்றித் தருணம் இது............-