கொஞ்சநேரமேனும்
தாக்குப்பிடிக்குமா
என்பது தான்
அறுந்த செருப்பின் மீதான
அதிகபட்ச அக்கறை......-
அன்பிற்கினியவள்
என்ற
அடையாளம்
போதும்
அறிவு அழகென்று
எல்லாமும்
சரிந்து மீளும்
சந்தர்ப்பம் பேசும்
ஆசை ஏற்கும்
அழுது குமுறும்
ஆனால் அது அப்படியல்ல
எல்லாரும் மிதித்தாலும்
அடிப்பட்டிருக்கிறதாவென்று காலை சோதிக்கும்
அழுதால் அரவணைக்கும்
சிடுசிடுப்பென்றால் அமைதி சொல்லும்
அலங்காரத் தேவையிருக்காது
அதீத அழகானது அது
அதை உடையாரும்
அப்படித்தான்-
வரையறுக்கப்பட்ட
அடையாளங்கள்
ஒன்றிலும்
பொருந்தவில்லை
இந்த இருப்பு-
அடுக்கிவைத்துவிட்டு
கெஞ்சிக்கொண்டிருப்பாய்
அடிப்பேனென்று கூட மிரட்டுவாய்
நீ எண்ணாததோ
அள்ளி இறைக்காததோ
இல்லை
பகுதிப் பிரிப்புகூட நடந்ததில்லை
அழைப்புக்கு முன்பே எடுத்து நீட்டுவாய்
அதுபோதுமென்பேன்
அதெப்படி போதுமென்பாய்
இரண்டு கேட்டிருப்பேன்
இருபதிற்கு குறையாது
கற்றைகளை கையாளும் பழக்கமுனக்கு
எனக்கு ஒற்றைக்குத்தான் உறுதி கிடைத்திருக்கிறது
எந்தச் சட்டையும் ஈடில்லை அப்பா
உன் சிரிப்புக்கு!
நீ குழந்தையான தினமொன்றை நான்தான் உருவாக்கினேன்!
எடுத்துப் போட்டு எப்படியிருக்கிறது என்பதெல்லாம் இதுதானே முதல்முறை?
-
வரையறைக்குள்
வந்துவிட்டால்
சுதந்திரமென்ற
சொல்லும்
சுவர்களுக்குட்பட்டது-
Attribution of love
Is remained same
Even though they
Thrown away you........-