QUOTES ON #உறவுகள்

#உறவுகள் quotes

Trending | Latest
24 APR 2019 AT 14:34

உறவொன்றைத்
தேடுகின்றேன்

(👇👇👇)


-


17 APR 2021 AT 20:42

நலமா ?...

-


10 OCT 2019 AT 22:41

தேடவில்லை
இதுவரை!
தேடினாலும்
கிடைப்பதில்லை!
அடையாளங்களை
அழிக்கவே
உறவுகளோ!

-


20 MAY 2021 AT 19:59

முடிந்த பயணத்தில்
நிரம்பி வழிகிறது
ஓடைகளின் சலசலப்பு
எதுவும் நிரந்தரமில்லை
எனும் முணுமுணுப்பில்

-


22 MAY 2021 AT 20:54

பார்க்காமலும்
பேசாமலும்
வருடங்கள் கடந்து
வலிகளில் வாழலாம்
ஆனால்
நினைக்காமல் ......

-


19 MAY 2021 AT 19:40

மிக நீண்ட இடைவெளியில்
மனநிறைவுடன் நீயிருக்க
மண்டியிட்ட அதே நிலையில் நான்
உனக்கான காத்திருப்பில்

-


20 MAY 2021 AT 19:56

கையொப்பமிட்டு
அழகு பார்த்த
வார்த்தை வரிகளை
அழிக்கச்சொல்லத்தான்
அலைபேசியழைப்போ!

-


25 NOV 2021 AT 21:12

அதெப்படி...
நினைப்பதையெல்லாம்
சொல்லிவிட்டு
வெகுதூரம் சென்றுவிட்டாய் ...
வழக்கம்போலவே
வெளிப்படுத்த முடியாத
என் உணர்வுகள்
மரணக்கூடுகளுக்குள்ளே
குஞ்சு பொரித்தபடி...

-


19 MAY 2021 AT 19:31

உன்னோடு பேச
நினைக்கையில்
கண்மூடி கேட்கிறேன்
பேசினால் தான் அன்பா....
எனும் எனையறைந்த
குரலொலியினை!

-