QUOTES ON #இதுவும்கடந்துபோகும்

#இதுவும்கடந்துபோகும் quotes

Trending | Latest
23 SEP 2020 AT 21:23

கடந்துப் போனதை
பற்றியெல்லாம்
கவலை எதற்கு உனக்கு?!

நீ கடந்துப் போவதற்காகவே
படைக்கப்பட்டதே அது!

-


25 JUN 2019 AT 13:37

நிம்மதி இல்லாவிட்டாலும்
பரவாயில்லை
பழையன யாவும் திரும்பிடட்டும்!

-


22 NOV 2021 AT 19:07






-


25 JUN 2019 AT 13:21

ஆதியில் இருந்தவையே
நிலைக்காத இந்நிலையில்
பாதியில் வந்த எதுவும்
நிலைக்கவா போகிறது?!?
எல்லாமும் ஏதோ ஒரு
காரணத்திற்காகவே!

"அனைத்துமே கடந்துபோக கடவது".

-


25 JUN 2019 AT 13:46

அதிகப்படியான அனுபவங்கள்கூட
ஆபத்தானதுதான்!

அழியச்செய்துவிடும்.

-



இதுவும் கடந்து போகும் என்பது
தொடர் புள்ளிக்கானது

-


15 JUN 2020 AT 0:28

அதிகபட்ச ஆசைகளை கூட
கனவுகள் என்றே
கலைத்துவிட முடிகிறது!

குறைந்தபட்ச
எதிர்பார்ப்புகளை தான்
பொய்யாக்க முடிவதில்லை!

சலிப்படையச் செய்யும்
நபர்களும் நாட்களும்
இருக்கத் தானே செய்கிறது!

#இதுவும் வாழ்க்கை

-


25 JUN 2019 AT 13:28

எந்த ஒரு அன்பும் நிலையானதில்லை!
எந்த ஒரு பிரிவும் நிரந்தரமில்லை!!
எல்லாமுமே
சிலகாலங்களுக்கு மட்டுமே!!!

-


21 JUL 2019 AT 22:59

இனப்படுகொலைகளும்
பாலியல் பலாத்காரங்களும்
கொலை கொள்ளைகளும்
இதுவும் கடந்து போகுமென்று
அதுவாகவே பழகிவிட்டதோ?!?!?

இன்றைய நவீன நரன்களுக்கு.

-


22 JUL 2019 AT 23:09

இதுவும் கடந்து போகுமென்ற
என் எண்ணத்தில் இடியென இதுவும் நடந்து போயிற்று!

அதுசரி,
"இதுவும் கடந்து போகும்" தானே?!?!
ஆனால்
எதுவும் மறந்து போய்விடவில்லை.

-