திட்டித் தீர்க்க தான் முடியவில்லை
ஆகையால் கொட்டித் தீர்க்கிறேன்
என் கவிகளின் வழியே
உன் மேல் கொண்ட காதலை...-
மல்லிகையின் மணத்திற்கு கூட
மயங்க மறுக்கும் என் மனம் ஏனோ
மன்னவன் அவன் செல்லப் பெயரிட்டழைக்கயில் மட்டும் மயங்கி விடுகிறது...-
மறைந்திருந்து பார்க்கிறேன் அனுதினமும் மறுகணம் நீ என்னை பார்ப்பாய் என்பதையும் மறந்து...
-
தென்றல் காற்றோடு திரண்டு
வரும் அவன் நினைவுகளை
ஏற்க மனமுமின்றி
வெறுக்க கணமுமின்றி
காற்றோடு காற்றாக கரைந்தே போகிறேன் நானும் அவன் நினைவுகளில்...-
அதோ வருவது அவன் தானே
இந்த குரல் அவனுடையது தானே
நிச்சயம் இந்த குறுஞ்செய்தி அவனுடையது தான்
இந்த கேள்விகள் இன்னும் சாகவில்லை என்னுள்
இனிமேலும் உயிர் வாழ்வேனா???
உன் நினைவுகளோடு
போரிட்டு மீள விரும்பவில்லை
உயிர் போனால் மகிழ்ச்சி தான்
என் ஆன்மாவாயினும் உனை அடையும்..........
-
மரணத்தின் பிடியிலிருந்து கூட
தப்பித்து விடுவேன் அவன் மௌனத்தின் பிடியில் அகப்படாத வரை...-
தட்டியெழுப்பப்பட்ட உன் நினைவுகளாலே - மீண்டும்
தடுமாறி விழுகின்றேன் நான்...!-
மணிக்கொரு முறை மணியைப்
பார்க்கிறேன் மறுகணம் அவன்
வரவை எதிர்பார்த்து...-