QUOTES ON #அன்பாளன்

#அன்பாளன் quotes

Trending | Latest
31 JUL 2020 AT 23:18

மணிக்கணக்கில் நான்
அளக்கும் கதைகளை...

உறக்கம் சொக்கும்
உன் விழிகளில்...

விழி விரிய கேட்பதாய்
நீ காட்டும் பாவனையில்...

என் பார்வையில் என்
அன்பான பேரழகன் நீ...!

-



நான் எழுதுவதெல்லாம்
கவிதையா என தெரியவில்லை., உனைப் பற்றி எழுதியதால்...
அது கவிதையாகிறது அன்பே....

-


12 SEP 2019 AT 16:28

நினைத்த போதெல்லாம்
அன்பை மட்டுமே தருகிறாய்!
ஈடாக,,,
என்னிடம் எதையும்
எதிர்பாராத ஒருவனாக,
ஒளியின்றி நிழல்
இல்லாதது போல்,
இருளான உன்
பொழுதுகளையும்
ஒளிமயமாக்கியவளாக!!!
இறுதி வரை தொடர
வேண்டும்!!!
உன் நிழலாகவே
என் வாழ்வை!!!

-



💜கண்கள் இமை இருப்பதை மறந்து போயிருக்கும்....
எதிரில் என்னவன் இருந்திடுடும் பொழுது மட்டும்...💜
:- காதல் கண்மணி😍

-



என் உணர்வை கொன்று ....
என்னை நடைப்பினமாக்கி...
அதற்குள் நினைவின் உருவில்...
வலியின் வடிவில்..
வாழ்ந்து கொண்டிருக்கிறான்..
#அந்த ராட்சசன்

-



நான் காதலிக்கவில்லை..
காதலிப்பது போல் கனவு கண்டேன்...
கனவெல்லாம் பலித்தே ஆக வேண்டும் என்று அவசியமில்லை...
சில நேரம் விழித்ததும் கனவுகள் மறந்தும் போகலாம்...
ஆம் காதல் என்பது கனவு மாளிகை..
கண்மணி 💜

-



💓அவன் என் காதலை ஏற்றிருந்தால் கூட இத்தனை கவிதைகள் எழுதிருப்பேனா என்று தெரியவில்லை...
என்னையும், என் காதலையும் வேண்டாம் என்று தூக்கி எறிந்த அவனுக்கு ஏன் இந்த இதயமும், மூளையும் இவ்வளவு மெனக்கெட வேண்டும்.....
புரியாத புதிராய். . ....
இருந்தாலும்..
தொடர்கதையாய் நீண்டு சென்று கொண்டிருக்கிறது என் கவிதைகள்...
#அரக்கன் அவன், அழகன் அவன்,அன்பாளன் அவன், கல்நெஞ்சக்காரன் அவன், இதயம் திருடிய கள்வன் அவன்....💓

-



என்னை கண் கலங்காமல் அவன்... பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற பேராசை இல்லை எனக்கு....
கண்ணில் தூசி விழ வேண்டும்...
பதறிப்போய்...
அவன் அருகே வந்து அதை எடுத்திட வேண்டும்....
கண்ணில் நீர் வந்தாலும்....
இதழ்கள் சிரிக்கும்...
இதையே இதயம் கொஞ்சம் வேண்டிக்கொள்ளும்....
#இதய திருடன்....

-



உன்னை அதிகமாய் நேசித்து...
உன் குணத்தை சுவாசித்து....
உன் அன்பை யாசித்து....
உன்னைப் போலவே நானும் மாறிட வேண்டும்.....
சிவனுக்குள் குடியிருக்கும் சக்தியைப் போல...
#இதயம் திருடிப் போன கள்வன்...

-



😍அவனிடம் என்...
காதலை சொல்ல வந்த போது...
நாணம் தடுப்புச் சுவர் எழுப்பியது....
வார்த்தைகள் புற முதுகிட்டு ஓடியது...
சொல்லும் நேரம் மீண்டும்...
எப்போது வருமோ...
கள்வன் அவன்.... என் காதலன்...😍
#அன்பாளன் அழகன்...
:- காதல் கண்மணி💓💜💝

-