⬆️என் கணவரின் தம்பிக்கு
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் 💜❤️💜-
அண்ணி வரும் வரை
அம்பியாக இருந்த
அண்ணன்
அண்ணி வந்தவுடன்
அன்னியனாக
மாறுவதைதான்
ஏற்றுக் கொள்ளவே
முடிவதில்லை
சகோதரிகளால்!!!!-
அன்புக்கு பெயர்போன அழகான உறவது.,
தாயிக்கு நிகரான கடவுளளித்த உறவது.,
தமையனெனும் உறவினுக்கு துணையாய் வந்த உறவது.,
ஆயுளுக்கும் உடனின்று கரங்கொடுக்கும் உறவது.,
இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்திருக்கும் உறவது.,
இளந்தென்றல் போல்வீசும் இனிமையான உறவது.,
ஒளிரும் விண்மீன் போல் மலருமந்த உறவது.,
பாசத்தால் பிறந்த பலவண்ண பந்தமது - அதுவே
அத்தி பூத்தாற் பந்தம் அண்ணியெனும் உறவே..-
என் அண்ணனிடமிருந்து
எனக்குக் கிடைத்த சிறந்த பரிசு
- என் அண்ணி❣️
-
அன்பினுக்கும் பாசத்திற்கும்
பெயர்போன உறவே
அன்னைக்கு அடுத்தபடி
உரிமை கொண்ட உறவே.,
அண்ணனின் பேருயிரே
எனதன்பு அண்ணியே.,
அன்பினால் என்னுள் வந்த
ஆனந்தப் பூங்காற்றே.,
ஒளிவு மறைவு என்பது
ஒருநாளும் இருந்ததில்லை நமக்குள்.,
தனிமையில் நிற்கையிலே
என் நிழலாய் நின்று.,
உடனிருந்து எப்போதும்
உறுதுணையை அளித்து.,
மனம் வருந்தி நிற்கையிலே
மாற்றத்தை தந்து
மகிழ்வினை அளித்த பந்தமே.,
காலம் முடிந்தாலும்
காலம் கடந்தும் தொடரும்
உங்களுக்கும் எனக்குமான
உள்ளம் சார்ந்த பந்தம்..-