எத எடுத்துட்டு போரனோ இல்லையோ..கண்டிப்பா இந்த "கைபேசி"ய வெச்சுட்டு போய்ருவ...
-
அழகான சோலை அதில் கொட்டும் அருவி..
விலங்குகளின் மேளம் அதற்கேற்ப பறவைகளின் நடனம்...
அனைத்தும் புத்தகத்தில்..அடுத்த நூற்றாண்டில்..-
மலர்கள் விரியும் ஓசை போல்-என்
மகள் சிரிக்கும் ஓசை!அந்த
பூ முகத்தின் புன்னகை-இந்த
பூமியை விட அழகு!
இதயம் துடிக்கும் ஒவ்வொரு முறையும்
இனிமையாய் அவள் நினைவுகள்!
நினைக்கும் போதே நெஞ்சம்
நனைக்கும் அவள் பேச்சுகள்!
வளர்ந்த பின்னும் குழந்தையாய்
மழலை மாறாத மனம் படைத்தவள்!
எங்கோ தூரத்தில் அவள்!ஆனால்
இங்கோ என்னுள் அவள்!
மனதை நிறைத்தவள் அவள்!
மௌனம் கலைத்தவள் அவள்!
நான் கொள்ளும் கர்வம் அவள்!
உயிராய்...உலகமாய்...அவளே!!
அவள் மட்டுமே!!!
-என் அம்மாவிடம் இருந்து...-
உன் பாதம் பற்றி
உன் அழகை மெருகேற்றுகின்றேன்
உன் மீது கொண்ட காதலால்.....-
அலங்காரமான
வார்த்தை எதுவும்
வேண்டாம்.....
அன்பான
ஒரு சொல்
அது போதும்...
கலங்கிடாமல்
சிரித்து வாழ...-
This heart always long for a true soul to vent out..
Later it realized...
It's better to it's own soul rather out..
**Peace from within**..-