காலம் சாதகமென
எண்ணா மணித் துளிகளில்,
காதல் சாதகமென
எண்ணா மணித் துளிகளில்,
வாழ்க்கை சாதகமென
எண்ணா மணித் துளிகளில்,
என் ஒவ்வொரு மனத்துளியும் நீ ...
சாத்தியம் ஆகும் நம் வாழ்க்கைத் துளி
என அவனது நம்பிக்கை....
அவளை நெகிழ வைத்தது
காலம் கைகூடும் என நம்பிக்கை பிறந்தது...-
மனம் என்று ஒன்று!!!!!!
உனக்கென ஓர் ஆசை, உணர்வுகளின்
வெளிப்பாடு என்பது இல்லையா???
அத்தனையும் உடைந்து விட்டது,
வாழ்வின் கசப்பான அனுபவங்களால்..
யாரையும் தவிக்க விடவோ
தவிர்த்து விடவோ, மனமில்லை....
மனம் என்று ஒன்று உள்ளதையே
மறந்து பல காலங்கள் ஆனது....
இது, பிறர் அன்பை பெற கூட மறுக்க ஆரம்பித்து விடுகிறது....
நம்பிக்கையை உதறிவிட ஆரம்பிக்கிறது....
-
நம்மை யாராலும் கீழே தள்ள முடியாது..
நம் மீது நாம் வைக்கும் பெரிய கை நம்பிக்கை மட்டும் தான்..
நம்மை நாமே ஆறுதல் படுத்தும் கை
நம்பிக்கை மட்டும் தான்..
நாம் செய்யும் வேலையை நல்லப்படியாக முடித்துக் கொடுக்கும் கை
நம்பிக்கை மட்டும் தான்..
-
அழகிய நாட்களை நினைத்து
வாழ்வதை விட..
இருக்கும் நாட்களை அழகானதாக
மாற்றி வாழலாம்..-
அவனுக்காக இவனுக்காக வாழ்ந்து... கிடைக்குறது எடுத்து...
தோல்வில துவண்டு...
இழந்து போகாம...
பிடிச்சத எடுத்து...
துணிச்சலா செஞ்சா...
முயற்சியும் முன்னேற்றமும்...
நித்தமே ஓர் நாளில் !!
_kavithai_raagam-
வாழ்க்கை
வாழ்க்கை என்பதோ...
வகுத்து வைத்த பாதை அல்ல...
போகும் வழியில்...
விழியால் வலிகள் கடந்து...
அமைவதே வாழ்க்கை...
ஏற்றமும் இறக்கமும் இருக்கும்...
இழப்பும் களைப்பும் இருக்கும்...
இல்லை என பின் செல்லாது...
முடியாது என நொடிந்து விடாது... நொடியையும் உன்னதமாய்... செலவழித்தால்...
எடுத்துக்காட்டாய் மாறலாம் நாமோ...
நம் வெற்றி பாதையை...
பலர் பின்பற்ற !!
_kavithai_raagam
-
சம்பாதிப்போ குறைவா...
வேண்டாம் கவலை...
மனமோ நிறைவா...
அதுவே உண்மை வெற்றி...
பிடிக்கா ஒன்றை...
கடமைக்கு செய்யாது...
பிடித்த ஒன்றை...
விரும்பி செய்வதோ...
வெற்றியை நிச்சயம் தரும் !!
_kavithai_raagam-