மகிழ்ச்சி எனும் முக மூடி அணிந்து வலம் வந்த என்னை....
உன் கவிதைகளால் மகிழ செய்து,
வருத்தம் என்ற முகமூடியை தேட வைத்து விட்டாய்...-
7 NOV 2018 AT 12:03
12 AUG 2019 AT 18:57
தனிமையின் ஆற்றல் அளவற்றது அதை கணக்கிட முடியாது.
மகிழ்ச்சியை அளவில்லாமல் கொடுக்கக்கூடிய ஆற்றலுடைய தனிமைக்கு மகிழ்ச்சியை முற்றிலும் முறிக்கக்கூடிய ஆற்றலும் இருக்கிறது.
இதை நம் மனமும் நம் சூழ்நிலையுமே முடிவு செய்கிறது.-
25 JUL 2019 AT 14:34
மகிழ்ச்சியைத் தேடிச் செல்லும் பாதையில் மகிழ்ச்சியைத் தான் தேடிச் செல்கிறோம் என்பதை மறந்து விடுகிறோம்.
-
10 JUN 2017 AT 13:52
எப்படி சொல்வேனடி.....
வானிலை அறிக்கையில்
''இன்று வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்படும்''
எனும் பொழுதெல்லாம் பதறிச்சென்று
அவள் மகிழ்வாய் இருக்கிறாளா
என்பதை கேட்டு உறுதி செய்கிறேன்.....
நான் கேட்கும் பொழுதெல்லாம்
அவள் வினவுகிறாள்
'' என்ன திடீர்னு....? ''
'' ஒன்னுமில்ல..... சும்மாதான்....''
என்று சிரித்துக்கொண்டே நகர்கிறேன்....
எப்படி சொல்வேன் அவளிடம்
'' நீதான் என் வானமென்று....''
-