அவளும் நானும்.. நதியும் கடலும்..
அவளும் நானும்.. நிறமும் குணமும்..
அவளும் நானும்.. தமிழும் நடையும்..
அவளும் நானும்.. சொல்லும் சுவையும்.
அழகும் திமிறும், அலையும் கரையும்,
அன்பும் அறனும், அவளும் நானும்...
அன்னையும் அன்பும் மழலையும் சிரிப்பும்
அவளும் நானும்.. தனிமையும் தவிப்பும்..
ஏடும் எழுத்தும்.. இடியும் மழையும்..
கரும்பும் இனிப்பும்... கனவும் கலாமும்..
நானும் அவளும் .. கவிஞனும் காதலும்..
நிழழும் மரமும்...தமிழனும் வீரமும்.....-
தமிழுக்கு மதுவென்று பேர்....
அமுதென்றும் பேர்....
ஆம்....
அந்த இன்ப தமிழை அள்ளி அள்ளி வழங்கிய உனக்கு என்ன பேர் வைப்பது??
"ஓடை குளிர் மலர் பார்வையினால் அவள் உண்ண தலைப்படும் நேரத்திலே பாடம் படித்து நிமிர்ந்த விழி தன்னில் பட்டு தெறித்தது மானின் விழி"..
எத்தனை கல்லூரி காதல் கவிதை எழுத பட்டாலும் இவ்வரிகளுக்கு ஈடாகுமா...??. ஆட்டனத்தி ஆதிமந்தியில் அழகாய் இயம்பினீர் அன்பின் இலக்கணத்தை... நீ தந்த குடும்ப விளக்கு... கலங்கரை விளக்காகிறது பல குல பெண்களுக்கு...
அழகின் சிரிப்பு படைத்தாய்.. உவமை பிறந்து... உவமை கவிஞனும் பிறந்தான் உன்னால்....
எங்களிடமிருந்து நீ மறைந்தாய்.... ஆனால் உன் தமிழால் எங்கும் நிறைந்தாய்.... குறு மீசை கவிஞரே
வாழிய நின் கவி....
வாழிய நின் தமிழ்...-
பாரதியின் காதலனே
உண்மையான காதலின் வெளிப்பாடாய்,
நீ உன்னுடைய பெயரையே மாற்றிக் கொண்டாய்.
ஆனால், நான் தற்பொழுது குழம்பிப் போய் உள்ளேன்
என் பெயரை சுப்புரத்தினம் என்றுமாற்றிக் கொள்வதா...
அல்லது
பாரதி தாசன் என்று மாற்றிக் கொள்வதா என்று....-