போதை பொருளாகவும்,
போகப் பொருளாகவும்
மட்டுமே
பார்க்கப்பட்ட ஒரு சமூகம்
தலை தூக்கும் போது !
ஏனோ தெரியவில்லை
முதுகில் குத்துகிறார்கள் !!
அதை ஜீரணிக்க முடியாத
மற்றொரு சமூகம்...-
கடந்து தான் செல்ல வேண்டும்..!
இறந்த காலத்தை அல்ல...
நம்மை
மேலும் இறக்க வைத்து,
புதுப்பிக்கும்
எதிர்காலத்தை!!!-
துணை என்னும் இரண்டெழுத்தின் உருவமாய் உள்ள தோழி என்ற இரண்டெழுத்தே...
பயம் என்னும் மூன்று எழுத்தை போக்க வந்த தோழன் என்ற மூன்றெழுத்தே...
துன்பம் என்னும் நான்கு எழுத்தை போக்குவதற்கே வந்த நண்பன் என்னும் நான்கெழுத்தே...
நண்பர்கள் என்னும் ஆறெழுத்துக் கொண்டவன் என்னுடன் இருந்தால் போதும்,
ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம் என்னும் ஆறெழுத்து நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை...!
-
ஏட்டு அறிவும் இல்லை
பட்டறிவும் இல்லை!
ஆனாலும், என் பிள்ளைகள்
என்னை போல் இருக்கக் கூடாது! என்று எண்ணியதாலோ என்னவோ...
இன்று
நீங்கள் கல்விக்கே தந்தை ஆனீர்கள்
ஆனால்,
தற்பொழுது கல்வி சேவையாக
இல்லை
வியாபாரமாக மாறிவிட்டதே
ஐயா.....-
என் ராசா
உன்ன நெனச்சா
எனக்கு பெருமையாவும் இருக்கு
ஏக்கமாவும் இருக்கு
ஆனா
தாய பாதுகாக்கிற கடமையில உன்ன மறந்துடாத உன்ன நம்பி
உன் குழந்தை தொட்டில காத்துக்கொண்டு இருக்கு...-
அன்று நிஜம் என்று நினைத்ததெல்லாம்
இன்று பொய்யாக மாறிக் கொண்டுள்ளது...
நான் இருக்கிறேன் என்று சொன்னவர்கள் எல்லாம்
நீ யார் என கேட்கிறார்கள் !
இந்தப் பொல்லாத உலகத்தில் நண்பர்களை நம்புவதா?
அல்லது
நம்பர்களை நம்புவதா..?-
எங்கிருந்தோ ஒரு குரல்!
ஐயா,
தாங்கள் எங்களை கொண்டாடவும் வேண்டாம்,
எங்களின் பெயரில் நீங்கள் ஓய்வெடுக்கவும் வேண்டாம்,
எங்களுக்கான மரியாதையும் ஊதியமும் கொடுத்தால் மட்டும் போதும்.
நான் உருவாக்கித் தருவேன் என் பிள்ளையை...
உங்களின் முதலாளியாக!!!-
பாரதியின் காதலனே
உண்மையான காதலின் வெளிப்பாடாய்,
நீ உன்னுடைய பெயரையே மாற்றிக் கொண்டாய்.
ஆனால், நான் தற்பொழுது குழம்பிப் போய் உள்ளேன்
என் பெயரை சுப்புரத்தினம் என்றுமாற்றிக் கொள்வதா...
அல்லது
பாரதி தாசன் என்று மாற்றிக் கொள்வதா என்று....-
தினம் தினம் அவரை நினைவு கூறுகின்றோம் ...
அட இது அவர் கலர் அல்லவா,
அட இது அவர் கண்ணாடி அல்லவா,
அந்த சிலை பக்கத்துல தானே லேண்ட்மார்க் வந்துடுறேன்,
என்று எல்லா விதத்திலும் நினைவு கூறும் அவரை,
ஏனோ தெரியவில்லை மறந்துவிட்டோம்...
அவரின் சமத்துவத்தை பின்பற்றுவதற்கு மட்டும்!!!-
இன்று தமிழ் புத்தாண்டம்!
தாய்மார்களோ காக்காவிடம் காக்கா பிடித்துக் கொண்டு உள்ளார்கள்,
வாலிபர்களோ ஏதோ ஒரு நாள் விடுமுறை என்று ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்,
தமிழ் ஆர்வலர்களோ ஐயோ இன்று இல்லை தமிழ் புத்தாண்டு என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள்,
ஆனால் நாமோ சுண்டல் என்று தயாராகும் என்று அடுப்பறையே பார்த்துக் கொண்டுள்ளோம்...
அழகான தமிழ்ப்பற்று!!!-