சம கால இளைஞர்கள் சிலர் நாங்கள் சாதி மத வேற்றுமைகளை கொண்டு மற்றவர்களிடம் பழகுவது இல்லை என்று கூறுகிறார்கள்...
அது ஓரளவுக்கு உண்மை தான் என்றாலும்
சுய சாதி மத எதிர்ப்பே தீண்டாமையை ஒழிக்க வழிவகுக்கும்....
சாதி மத மூட நம்பிக்கைகளுக்கு எதிரான உரையாடல்களை நம் வீடுகளில் இருந்து தொடங்குவோம்....
அடையாளங்களை துறப்போம்...
மனிதம் காப்போம்..!-
சிறுவன் 1: இனிமேல் ஒழுங்காக படிக்க போறேன், நல்லா படிச்சு வீடு கட்டணும்...
சிறுவன் 2: ஏன்டா திடீர்னு இப்படி சொல்லுற...
சிறுவன் 1 : சாமியே சரியா படிக்கல போல, அதனாலே தான் அவரு வீடு கட்டவே 500 வருஷம் ஆகி இருக்கு போல....
-
சென்னை வெள்ளம்
கடவுளே இந்த மழை வெள்ளதுல
இருந்து எங்களை எப்படியாச்சும்
காப்பாற்று - என்று இறைவனை வேண்டுகிறாள் அம்மா!!!!
வெள்ளத்தில் கரைந்து விட கூடாது என்பதற்காக சாமி சிலையை பரண்மேல் வைத்து காப்பாற்றினாள்
மகள் !!!
-
கடன்களும் கடமைகளும் வரும்போதெல்லாம் ....
கடவுள்கள் காணாமல்
போய்விடுகிறார்கள்...!!!!!
-
சாதி என்றால் என்ன அப்பா?
சாதிக்க பிறந்தவனை
ஆதிக்க மனநிலையால்
சாதிக்க விடாமல் தடுக்கும்
சகதி தான் சாதி...!
-
தன் வழியில் செல்பவர்களுக்கு
தினமும் ஒளி கொடுத்தும்
தலை குனிந்தே நிற்கிறது
தெரு விளக்கு....-
சாத்தான்கள் இல்லை - என்றுதான் நினைத்தேன்.....
சாத்தான் குளத்தை பற்றி
அறியும்வரை...-
அப்பா அழைத்தார் - வர வில்லை
அதிகாரி அனுமதித்தார் - அசரவே யில்லை
பைங்கிளி விரும்பினாள் - பறந்து வந்தான்-
என்னிடம் சொற்கள்
தயங்கி நின்றது
மனதிடம் கொண்டு
கடிதம் எழுதினேன்
இருப்பிடம் வந்தேன்-
இம்முறையும் விடுமுறை
விண்ணப்பத்தை நிராகரித்தாய்.....
கார்ப்பரேட் வாழ்க்கை
-