மனதை கல்லாக மாற்றி,
சில நினைவுகளை அதனுள் புதைத்து வைத்தாலும்...
பிளவு கண்ட போது எல்லாம்...
முளைத்து அழகு காட்டுகிறது...-
5 NOV 2018 AT 21:18
8 NOV 2018 AT 23:50
நுகர்ந்து விளித்தர் மணமென்னவோவென -
மழை நீர் மண் புகுந்த மணமென்றேன்
துகிலகற்றி திகைத்தர் குறியென்னவோவென- பசித்த
பிள்ளை படுத்திய பாடென்றேன்
எள்ளி நகைத்தனர் சோர்வெதற்கோவென்று
இரவில் கண்ணுறங்கா கடலலையை கண்டு இளைத்தேனென்றேன்
விரகமென்றால் அல்லலென்று சிரித்தர் - மனமோ
பக்தியென்றால் புனிதமன்றோவென உரைத்தது
-
5 NOV 2018 AT 22:31
மொழி புரியாத இசை
மனதோடு மட்டும் என்ன பாஷையில் பேசியதோ,
என்றும் இல்லாத ஆழ்ந்த நிம்மதி
மனதோடு இணைந்தவற்றை நினைக்காமலே.-
5 NOV 2018 AT 21:17
நான் படைக்கும் பிரம்மனேனில்
பெண்மையை உணர்த்தும் மென்மையை ஆண் இடத்திலும்
ஆண்மையின் வலிமையை பெண் இடத்திலும்
திருத்தங்களாகச் செய்துப் படைத்திருப்பேன்-
5 NOV 2018 AT 21:21
தேடித் தேடி அலைந்தேன்
எந்த தலைப்பும் கிடைக்கவில்லை என்ன செய்ய
உங்கள் விருப்பத்தில் தேர்ந்தெடுத்து எழுத
கண்மணியின் சார்பாக அறிவிக்கிறேன்....
-