Deepika Sekar  
153 Followers · 74 Following

read more
Joined 7 August 2018


read more
Joined 7 August 2018
30 SEP 2018 AT 22:29




உருகும் மெழுகாய் நீ!!
உயிர்த்தெழும் ஒளியாய் நான்!!!

-


29 MAY 2020 AT 19:48

அந்திமாலை காற்றை ரசித்திருந்தேன்
சட்டென்று சூழ்ந்தன கருமேகங்கள்
ஆழிப்பேரலையில் சிக்கி
திணறிக் கொண்டிருந்தேன்
அரண் வேண்டி காத்திருந்தேன்
கரம் ஒன்று நீண்டது
பிரிவில்லை என்றே பிடித்திருந்தேன்
விழித்ததும் உணர்ந்தேன்
கண்டது கனவென்று
பிறகே அறிந்தேன்
பற்றியது தலையனையென்று😉😉

-


21 MAY 2020 AT 13:21

இடைவேளை நீண்டு போகும்

உறவுகள் விலகிப் போகும்

இன்பமும் தொலைந்து போகும்




-


15 NOV 2018 AT 16:35

புகைப்படம் :
உறைந்த நிமிடங்கள் - அதுவோ
பேசும் பல கதைகள் 
உணர்ச்சி கலவைகள் - என்றும் 
எண்ணிலடங்கா நினைவுகள்
நித்திரைக் கனவுகள் - அனைத்தும்
வண்ணமயமானப் படங்கள்

-


13 NOV 2018 AT 23:22

எதிர்பார்க்கிறது :
கள்ளமில்லா அன்பை
வஞ்சகமில்லா பண்பை
தனக்கான தனி கவனிப்பை
பொறாமையில்லாப் பாராட்டை
ஆசைப்படும் சிறிய பொருட்களை
தொலையாமல் மறைந்து இருக்கும் குழந்தைத்தனத்தையுமே என்றென்றும்

-


10 NOV 2018 AT 12:46

வழியும் கண்ணீரின் இடையே
சிலரால் தோன்றும்
புன்னகையும் அழகுதான்...
சிரிப்பின் இடையே
சிலருக்காக இமைத் தாண்டும்
ஆனந்தநீர்துளியும் அழகுதான்...

-


6 NOV 2018 AT 21:46

எடிசன் கண்டுபிடிப்புக்கு அவசியமே இருந்திருக்காது

-


5 NOV 2018 AT 21:17

நான் படைக்கும் பிரம்மனேனில்
பெண்மையை உணர்த்தும் மென்மையை ஆண் இடத்திலும்
ஆண்மையின் வலிமையை பெண் இடத்திலும் 
திருத்தங்களாகச் செய்துப் படைத்திருப்பேன்

-


3 NOV 2018 AT 13:53

உன் இதழோரப் புன்னகையில் 
கண்ணாடியும் உன்னை காதலிக்கும்

So keep Smiling Always😊☺

-


1 NOV 2018 AT 14:30

இருள் சூழ்ந்தாலும் கருவறையே
நம் முதல் காவல்
ஒளி இழந்தாலும் கல்லறையே
நம் இறுதி காவல்

இடையில்தான் அவை
தொலைந்து விட்டது போலும்
நம் பெண்களுக்கு🤔

-


Fetching Deepika Sekar Quotes