-
22 MAR 2020 AT 14:55
எழுத்துக்களின் கருவறை நீயம்மா...
உன் தரிசனத்திற்காக - நான்
வாழுகின்ற கோவில் இவ் yq குழுவம்மா...!
அடுக்கடுக்காய் நீ எழுதுகிறாய்...!
தடுப்பாரை புறந்தள்ளி எழுதுகிறாய்
இடுக்குக்கண் களைந்து எழுதுகிறாய்...!
கொடுந்துயரம் மறந்து எழுதுகிறாய்...!
பொழுது முழுக்க எழுதுகிறாய்...!
விழுதாய் கிளை பரப்பி எழுதுகிறாய்..!
எழுது எழுது - என் இனிய தமிழே
உன் மடியில் தவழும் வரை
எழுதிக் கொண்டேயிரு தாயே...!-
8 JUN 2021 AT 0:00
ஒவ்வொரு முறை படித்து
முடிக்கும் போதும்...
அதற்குள் முடிந்து விட்டதே
என்ற மிட்டாயின் சுவைக்கு
ஏங்கும் மழலையாகிறேன்...
அன்பானவளின் அழகான
வரிகளில் ❤
என்றும் அன்பானவளுக்கு
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் 💐💐💐-