தொலைவில்
பூத்துக் குலுங்கும்
வான் நிலா பார்த்து
கவி வடிக்கிறாய்
சுகமாய்!
உன் முழு மதி அருகில்
பிறையாக வாடுது!
இருந்தும் ஏனோ
மனம் வெறுத்துச்
செல்கிறாய்
ரணமாய்!-
அன்று முத்தமிடத் துடித்த
உன் இதழ்கள் இன்று
என் மூச்சை விடச்
சொல்லி துடிக்கிறதே!
முத்தெடுத்த
காதல் முழுதாய்
மூழ்கடிக்கவும் செய்யும்
என்பது இதுதானோ!-
நான் உரைத்திடாத
பெரும் நேசத்தினையும்
நான் மறைகின்ற
பெரும் சோகத்தினையும்
என் கண்கள் வழியே..
உன் ஒருவனால் மட்டுமே
உணர்ந்துக் கொள்ள முடியும்!-
சோகங்களை பகிர்ந்தால்..
"நீ ஏன் அப்படி செய்தாய்..
கவனமாக இருந்திருக்கலாமே.."
என பல கேள்வி மொழிகளை
அடுக்கிக்கொண்டு மேலும்
மனதை ரணப்படுத்துவதிலே
கவனமாய் இருக்கும் உலகினில்
"ஆறுதல்" என்ற ஒற்றை வார்த்தை
அனாதை தான்..
அதனாலே பலவற்றை மனதில்
புதைத்து கண்ணீரில் ஆறுதல்மொழி
தேடி திடப்படுத்திக் கொள்கிறேன்..!!
- இளங்கவி ஷாலினி கணேசன்-
சோகங்களை சுகங்களாக்கி
சுவர்க்கத்தில் சொப்பனம் கண்டு
சொர்க்கத்தை சீதனமாக்கும்
சித்தினி நான்..!!!
_ இளங்கவி ஷாலினி கணேசன்-
நீ கனவில் எழுதிய
கவிதை நானோ?
விடிந்ததும் என்னை
கானல் என
ஒதுக்கி விட்டாய்!
இருந்தும் உன்னை,
என் உயிரில் கலந்த
உணர்வாக எண்ணி
உயிர் பிரியும் வரை
நினைத்திருப்பேன்!-