பாராளுமன்றம்
தோற்றது
என்
ஏர்ராளுமன்றத்திடம்
வென்றது
வேளாண் புரட்சி... 💪💪-
21 JUL 2019 AT 16:33
#வேளாண் தொழில்....
# வேளாலன் நிலை....
வேர்வை சிந்தி வேளாண்மை
செய்பவனே தவிக்கிறான்
அதை குடித்து வியாபாரம்
செய்பவனோ செழிகிறான்
உலக மக்கள் உணவுக்கு
உனை நம்பி இருக்குது
முப்பொழுதும் உண்டாலும்
உனை என்றும் மறக்குது
அவன் கெட்டாலும் பெற்றாலும்
கொடுக்கும் விலை ஏற்கிறான்
அதை பயன்படுத்தி மற்றவனும்
அவனை என்றும் ஏய்க்கிறன்
உனக்குதவ இவுலகில்
எவ்வினமும் இல்லையே
கொடுதாலும் அதை நீயும்
பெறுபவனும் இல்லையே
அவன் பாட்டால் உன்வீட்டில்
தினம் உலையும் கொதிக்குது
அவன் உடைமைக்கும் உரிமைக்கும்
உலை வைத்து சிரிக்குது
அவன் மாமனிதன் என்றாலும்
ஈடாக மாட்டான்
கூலி இன்றி மெய் வருத்தி
கடவுளிடம் கேட்டான்....-