விரும்பியவர்
நம்மோடு தான் வாழனும்
என்று அடம் பிடிக்காமல்
நடைமுறையை
ஏற்று
நலமாக வாழ்ந்தால் போதும்
என்று எந்த
சூழ்நிலையிலும்
மனதார
மானசீகமாய்
சுடரச் செய்யும்
சுகமான வாழ்த்துரை.-
திடீரென ஏற்பட்ட
உந்தன் மாற்றம்
இதயத்தில் இதுவரை
இல்லை ஏற்றம்...-
அறிமுகம் செய்கிறாள்
என் மகள்..
தன் பெயர் வைத்துள்ள
ஒருவரென அவளை..
எப்படி சொல்வேன் நான்
என் மகளிடம்..
அவள் பெயர்தான்
உன் பெயர் என...
-
அவளுக்கு நான்
தகுதியற்றவன்..
என என்னை
கைவிட்டு சென்றவள்..
அங்கே
இன்னொருவரிடம்
காதலுக்காக
கையேந்தி நிற்கிறாள்
தகுதியற்று...-
காதலின் அடையாளமாக
நீ தந்த மோதிரம்
கவலையின் அடையாளமாக
என் விரல்களில் இன்று...-
தனி உலகினை
அமைத்துகொண்டாள் அவளுக்கென..
நானும் அமைத்துகொண்டேன்
எனக்கென..
"தனிமை உலகினை"...
-
அவள் வார்த்தைகளில் ஒரு தடுமாற்றம்
புரிந்துகொண்டேன் என்னை விட்டு
பிரிந்து செல்ல நினைக்கிறாள் என்று
உள்ளத்து ஆசையை பூட்டி கொண்டு
பிரிவு தந்த வலியை ஏற்றுகொண்டேன்
இது நாள் வரை என்னை நேசித்ததற்காக.......-
செய்தது என் தவறு
என்றபோதிலும்..
ஏதோ ஆழ்மனதில்
தோன்றிவிட்டதடி..
என்றுமே நீ
எனக்கு நிரந்தரமில்லை
என்ற ஒரு எண்ணமது...
-
ஊதுபத்தி தான் நான்
உள்ளத்தால் பிணமாவதால் தான்
ஊருக்கே மணம் ஆகிறேன்...-
யாரோ ஒருவரின்
காதலை சேர்க்க
எந்தன் காதலியை
தியாகம் செய்கிறேன்..
இப்படிக்கு
ரோஜா செடி...-