மழைக்காற்றும் தேநீரும்
முயற்சித்தும் மனதில்
நிறைந்து தளும்பிய
சாய்வுநாற்காலியை
துளைத்த விழிகளை
அகற்ற முடியாமல்
அவரின் மூக்குக்கண்ணாடியை
சற்றே உரசிச்செல்கிறது...!!!-
பாட்டியை கோவிலுக்கு அனுப்பி வைத்துவிட்டு வழி மேல் விழி வைத்து காத்து கொண்டிருக்கும் தாத்தாவை கண்டு உணர்ந்தேன் உண்மை காதல் காலத்தால் மாறாது என்று....
-
😛Childhood தில்லுமுல்லு 😛
எனக்கு தாத்தா ன்னா உசிரு!
தாத்தா வீட்ல தான் my childhood...
தாத்தா கடைய சாத்திட்டு
கடைசியாக தான் வீட்டுக்கு வருவாரு!
எல்லோரும் அதுக்குள்ள Dinner
சாப்பிட்டு முடிச்சிடுவாங்க.
என்னைய தான் கிச்சனுக்கு போய்
ரசம் எடுத்து வரச் சொல்லுவாங்க!
நான் பாதி ரசத்தை வேறு பாத்திரத்தில்
ஊத்தி ஒளிச்சு வச்சிருவேன்!
மீதி ரசத்துல ..தண்ணீ ஊத்தி
கொண்டு வந்து கொடுத்திடுவேன்!
எல்லாருக்கும் தண்ணீர் ரசம் கொடுத்திட்டு...
தாத்தா வந்ததும் மீதி ரசம் தாத்தாவுக்கு
பாசமுடன் பறிமாறியதொரு காலம்!
தாத்தான்னா அம்புட்டு இஷ்டம்!
சின்னதுல நான் செஞ்ச தில்லுமுல்லுல
இதுவும் ஒன்னு!
😛😛😛😛😂😂😂😂-
தாரமிழந்து அடுப்படியில் தனியே
தட்டுப்புட்டு சமான்களை உருட்டும்
எண்பது வயது தாண்டிய கிழவன்..
கிழவன் பெற்ற ஒற்றை மகனோ..
ஒரே ஊர்
ஒரே தெரு
ஒரே வீடும்கூட தான்
வாசல் வேறு..
செறுமிக்கொண்டும் தடுமாறிக்கொண்டும்
இருக்கும் கிழவன் வியாதி தொற்றி
படுக்கை ஏறினாலும் விசாரிக்கவரும்
சுற்றங்களுக்கிடையில் மட்டும்
ஒரு வாய் தண்ணீர்கூட மோந்து
தராத மருமகள் வெரசா வந்து ஒட்டிக்கொள்கிறாள்..
பாட்டனுக்கு வாங்கி வந்த பழங்கள்
திண்ப்பண்டங்கள் கடத்தி செல்ல..
_ இளங்கவி ஷாலினி கணேசன்-
கதை கேட்டுப் பாருங்கள்..!
ஒரு முப்பது நாற்பது
ஆண்டுகள் முன்னென...
நம் தாத்தா பாட்டிகளிடம்..!
இறுக்கமான இருதயக்கூடு
இலகுவாக மாறிடக் கூடும்..!
💓💛💚💙💜❤💜💙💚💛💓-
குச்சனூரு போயி வந்தோம்..!!
பதிவிற்கு👇👇👇👇
_ இளங்கவி ஷாலினி கணேசன்-