அந்தக் காலத்தில் தேவர்கள் அசூரர்கள்
இரண்டு வகை இருந்தனராம்..!!
பேசிக் கொண்டிருக்கும் பொழுது
சொல்லிக்கொள்ளாமல்
அழைப்பை துண்டிப்பவர்களையும்
அசூரர்களின் பட்டியலில்
சேர்த்து விடலாம்...!!!-
வார்த்தைகள் எல்லாம்
வசமற்று போகையில்...
திக்கி திணறி தேடி
அலைந்து ஊமையாய்
நிற்கையில்...
என் விழிகள் பேசும்
மொழியை வாசித்த
முதல் வாசகன் நீ... !-
ஒரு முறை பார்த்திடு
போதும்...
அதை ஓராயிரம் முறை
கொண்டாடிடும் மனது...!-
தேக்கி வைத்த கனவுகள்
மட்டுமே என் வசம்...
அதை திறக்கும்
சாவியெல்லாம் உன்
வசமே...!-
காத்திருப்பை ரசிக்க
கண்டபின் ஊடல் கொள்ள
காதலிலே உருகி விட
ஆசை தான்...
சொப்பனத்தை தாண்டி
சொற்பமாகவேனும்
நிஜத்திலும்...!-
இதமாய் மலரும்
ஏதோ ஒரு
புன்னகையின்
இடையே...
இயல்பாய் நுழையும்
நினைவொன்று
நினைவுறுத்தி போகும்
இழப்பின் வலியை...!-
மௌனத்தின் பிடியில்
மரணிக்க போராடும்
வார்த்தைகளிலிருந்து
சிதறிய எழுத்துக்கள்
வடிந்த குருதியில்...
தனக்கென எழுதி
கொண்டது ஓர்
இரங்கல் கவிதையை...!-
பசிக்குமே
என்று
உணவு
தந்தேன்
ஆனால் அதை
அலங்கார
பொருள்
ஆக்கினான்
சிலரிடம்
காட்டும்
அன்பும்
அப்படித்தான்
ஆகிறதோ!!?-
இதமாய் படரும்
இனிய கனவுகளுக்காய்
காத்திருந்த இமைகளில்
உன் நினைவுகள்
படர்ந்ததும் ஈரத்தின்
சுவடுகள்...!!!-