இன்றைய
கசப்பான ஒன்று
நேற்றைய
இனிய நிகழ்வின் நினைவே
-கலீல் ஜிப்ரான்
-
காதல்..
அதற்கென்று ஆசைகள்
எதுவும் இல்லாதது...
அது நிறைவேற
வேண்டுமென்பதைத் தவிர.
-கலீல் ஜிப்ரான்.-
ஒரு கவிஞன் தனது துயர எண்ணங்களைக் காதலிப்பது போல
நீங்கள் என்னைக் காதலிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
-கலீல் ஜிப்ரான்.-
உண்மையைக் கண்டறிய
இருவர் தேவை
ஒருவர்
உரக்கச் சொல்வதற்கும்
மற்றொருவர்
உணர்ந்து கொள்வதற்கும்.
-கலீல் ஜிப்ரான்.-
ஒரே ஒரு முறை தான்
பேச்சற்றுப் போனேன் நான்
அது
'நீ யார்' என ஒரு மனிதன்
கேட்ட போது..!
-கலீல் ஜிப்ரான்.-
நான் உலகத்தை விட்டு
ஏகாந்தத்தைத் தேடியதற்குக் காரணம்
பணிவு என்பது பலவீனம் என்றும்
பரிவு என்பது கோழைத்தனம் என்றும்
செல்வப் பகட்டு ஒருவித வலுவென்றும்
நம்பிடும் பல்வேறு
மாந்தருக்கு மதிப்பளிப்பதில்
நான் களைப்படைந்து போவதே .
-கலீல் ஜிப்ரான்.-
யாத்ரீகனின்
பின்னால் செல்லும்
தெருநாய் எந்த எண்ணத்தில்
கிடைத்த எலும்புத் துண்டை
மண்ணில் மறைத்து வைக்கிறது
என்று யாருக்கும் தெரிவதில்லை.
-கலீல் ஜிப்ரான்-
ஒரு நாள் நீ என்னைக் கேட்பாய்
"எது முக்கியம் உனக்கு?
உன்னுடைய வாழ்க்கையா?
இல்லை என்னுடையதா?"
"என்னுடையது" என்பேன்.
கேட்டதும் விலகிச் செல்வாய்.
என்னுடைய வாழ்க்கையே
நீ தான் என்பதை அறியாமல்...
-கலீல் ஜிப்ரான்-
நினைவு கொள்வதே
சந்திப்பின்
ஒரு வடிவமாகும்.
-கலீல் ஜிப்ரான்.-