மௌனங்களாய்...
இரைச்சல் கேட்கும்
இதயங்களுக்கிடையே-
Udayachandrika Sundar
(Chandrika)
311 Followers · 111 Following
Joined 23 October 2019
13 MAR AT 19:04
நெருங்கியவரிடம் காணும்
சின்ன மாற்றங்களையும்
தாங்கிடாத
இந்த இதயத்திற்கு
தாயின் கதகதப்பை
சற்று நீங்கினாலும்
விழித்தழும்
மழலையின் சாயல்-
8 FEB AT 19:02
வண்ண வண்ண
பலூன்களும்
வட்டமாக சுற்றிய
கருப்பட்டி மிட்டாயும்
தலையில் தைத்துக் கொண்ட
தாழம்பூவும்
தலை கிறுகிறுக்க சுற்றிய
பெட்டி ராட்டினமும்
என அடிக்கடி என்
மகளுக்குச் சொல்லும்
கதைகளில் எனது
பால்ய குதூகலங்கள்-
4 DEC 2024 AT 7:44
என்னென்னவோ செய்து
கெஞ்சி, கொஞ்சி
அணைத்து முத்தமிட்டு
சமாதானப்படுத்த முயல்கிற
உன் நினைவுகளுக்கு
அடம்பிடித்து அழுகின்ற
குழந்தையின் சாயல்.-
11 FEB 2024 AT 22:25
தானிருக்கிறேன்.
ஒரு நொடியும்
நினைக்காமல்
என் நாட்கள்
ஓடுவதில்லை...-
11 FEB 2024 AT 22:19
தேவைப்பட்டது
சில அவமானங்களும்,
சில துரோகங்களும்,
சில தோல்விகளும்,
சில சறுக்கல்களும்....
-
9 FEB 2024 AT 16:41
நம் காதல்
ஆகிடுமோ?
இரு... இரு...
கொண்டுவருகிறேன்
காரமாக!
ஒரு கோப்பை ஊடல்.-
8 FEB 2024 AT 23:07
இருப்பதாய் உணரவைக்கும்
எப்போதோ உன்னுடன்
இருந்த நினைவுகள்..-