-
14 NOV 2019 AT 19:41
யாரை சூடிக்கொள்ள
இத்தனை வேடம்......
திடீரெனத்தாக்கிய
உன் எச்சரிக்கையில்
பட்டுத்தெறிக்கிறது
பல மாற்றங்கள்!-
29 DEC 2019 AT 15:02
ஏமாறியதற்கும்
ஏமாற்றியதற்கும்
இடையே நம்பிக்கையின்
கழுத்தை இறுகப் பிடிக்கிறது
சொல்லப்படாத சில உண்மைகள்...!!!
-
19 JUN 2020 AT 14:06
அன்று முத்தமிடத் துடித்த
உன் இதழ்கள் இன்று
என் மூச்சை விடச்
சொல்லி துடிக்கிறதே!
முத்தெடுத்த
காதல் முழுதாய்
மூழ்கடிக்கவும் செய்யும்
என்பது இதுதானோ!-
28 MAY 2020 AT 9:37
சுமந்த பறவையை
விட்டு உதிரிய
இறகுகள்
நீ பற்றிய பின்னால்
உனக்குரியதென்பதில்
என்ன நிச்சயம்!-
28 MAY 2020 AT 13:30
எதிர்பார்ப்புகள்
இல்லாத போது
கன்னம் கீறிய
முத்தங்கள்
இதயத்தை
கிழித்தால்!
கூடலில் முத்தங்கள்
கண்களின்
காட்சிப் பிழையோ!
'ஏமாற்றம்'-