அடுத்த வீட்டில் இருக்கிறது
ஆனால் நம் வீட்டில் இல்லையென்று
மகிழ்ந்து கொள்ளும் ஒரே விஷயம்
" பிரச்சினை தான்" 😜😂-
பேசும் வார்த்தைகளில்
அமிலம் தோற்று விடும் சில பிள்ளைகள் பேசுவதைக் கேட்டால்.
அவள் ஒரு single parent. ஒரே மகள்.. அது கூட்டுக் குடும்பம். அவள் நல்ல திறமைசாலி என்பதால் நல்லது கெட்டது முடிவுகள் அவள் எடுப்பது தான்.
மகளை மட்டும் ஏனோ திருப்திபடுத்த முடியவில்லை.
மகளும் அதி புத்திசாலி நல்ல படிப்பு..
வெளி வட்டாரத்தில் நன்கு சிரித்து பேசி அவளைப் போல உண்டா என்று அனைவரும் சிலாகிக்கும் மகள் அம்மாவிடம் மட்டும் சிடுசிடுவென எப்போதும் கோபமாய் அலட்சியமாய்மட்டமாய் அழவைப்பாள் சில நேரங்களில் அப்படி யே அம்மாவிடம் பணிவாள்.கிறுக்கோ இவள் அல்லது மனம் பிசகியவளோ என்று தோன்றும்.
அவளின் அம்மா சொல்கிறாள்
வீட்டிற்கு வெளியே வரும் மன அழுத்தத்தை ஒரே உரிமையான என்னிடம் காட்டி வறுத்தெடுக்கிறாள். திருமணம் ஆனால் கணவனை படாதபாடு படுத்தி விடுவாள்.
இவள் எல்லாம் திருமணம் செய்யாமல் வேலை வருமானம் சர்வீஸ் என்று இருந்தால் தான் நல்லது. இவளுக்கு வரன் பார்க்கவே பயமாக இருக்கிறது என்று 🙁-
குளிக்க வைத்த சுடுநீரை
எடுக்கக்கூட சமையலறை
எட்டிப் பார்க்காதவர்..
இன்று
சோறு வடிக்கிறார்
தோசை ஊற்றுகிறார்.
ஆம்லெட் போடுகிறார்.
இதையெல்லாம் அப்போதே செய்திருந்தால்
நோயின் போராட்டத்தை மீறி
கொஞ்சம் நிம்மதியாகவாவது
செத்திருப்பார்கள் அம்மா.
-
எந்நேரமும் வெளியேறலாம்
அதற்குண்டான
தகுதியும்
தைரியமும்
இருக்கத்தான் செய்கிறது..
இதோடு முடிந்துவிடுமா
என்று எழும்
கேள்விக்கான பதில்
இல்லை என்று வரும் வரை
கதவுகள்
மூடியே இருக்கட்டும்..-
ஆசைக்கு சுரண்டுபவர்கள்
தப்பித்து விடுகிறார்கள்.
அவர்கள் அப்படித்தான்.
வேறு வழியின்றி
தேவைக்காக திருடுபவர்கள்
மாட்டிக் கொள்கிறார்கள்..
......
உறவுகள் சுற்றத்தார் மனதிலும்
மனசாட்சியிடமும்
-
எவ்வளவு நேரம் கடந்தாலும்
ஒரு சண்டைக்கு பிறகு
இந்த மாதிரி பேசிட்டாரே என்று
திரும்ப திரும்ப நினைத்துப் பார்த்து
மனதுள் பொருமிக்கொண்டிருக்க
இப்ப என்ன சொல்லிட்டேன் னு
மூஞ்சிய தூக்கி வச்சிருக்க
என்று சொன்னதை மறந்து
நம்மை குற்றவாளி ஆக்கி
கடந்து விடுகிறார்கள்
சுலபமாக.-
வெளியே கடைகளில்
முக்கியமாக ஹோட்டல்களில்
காப்பி, டீ குடித்து பழகியவர்கள்
உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில்
காப்பி டீ குடிக்கும் போது
இது என்ன பால்?
எவ்வளவு தண்ணீர் சேர்ப்பீங்க?
என்ன பிராண்ட் காப்பித் தூள் அல்லது தேயிலை
வேற பிராண்ட் வாங்கலாமே
என்ற கேள்விகள் கேட்டு
அந்த கடையில குடிக்கனும்.. நல்லா இருக்கும் என்று
சொல்வது
எனக்கென்னவோ
அந்த வீட்டு பெண்மணியை
அவமானப்படுத்துவதுபோல்
தோன்றுகிறது.-
நிராகரிப்பைக்கூட
பரவாயில்லை என்று
பழகிக் கொண்ட
இதற்கு பெயர்
பக்குவமா?
விரக்தியா?-
22ல் படிப்பு முடிந்து
மூன்று வருடங்கள் வேலை பார்க்கும்
25 வயது அவள்
இதுவரை
சொந்தமாக
இடம் கூட வாங்கவில்லை.
அதிகபட்சமாக
இரண்டு வருட வித்தியாசத்தில்
மணமகன்தேவையாம்.
அதே 22ல் படிப்பு முடித்த
27 வயது அவனுக்கு
சொந்த வீடும்
Bank balance ம்
இருக்க வேண்டுமாம்.-
ஆணாதிக்க
அப்பனுக்கு
பிறந்த மகளுக்கு
அனுசரனையான
புருஷன்
வாய்த்துவிட்டால்
பிறந்த வீடு
தூரம் தான்
புகுந்த வீடு
சொர்க்கம் தான்.-