QUOTES ON #KARUNANIDHI

#karunanidhi quotes

Trending | Latest
8 AUG 2018 AT 6:18

அன்பு சூரியனே,
உன் உரிமைக் குரல் மறைந்தாலும்,
உனது உஷ்ணம் குறைவதில்லை...
கடற்கரையிலே நீ கலப்பதில்லை,
ஆனால் கடலில் உன் சங்கமிப்பை
தடுப்பார் யாருமில்லை...
இன்று நீ மறைந்தாலும்,
நாளை உன் விடியலுக்காக
காத்திருக்கிறோம்
அன்பு சூரியனே...

-


8 AUG 2018 AT 10:39

தமிழை செம்மொழியாக்க பாடுபட்டவர்
இன்று விழிப்பில்லா நித்திரையில்.....

RIP Kalaignar Karunanidhi


-


8 AUG 2018 AT 16:05

I have no more jokes on Tamil Nadu. They are all dead .

-


8 AUG 2018 AT 10:13

கலைஞன் என்ற பொதுப் பெயரும்
உன்னை மட்டுமே அடையாளப்படுத்தி
நிற்கும் தனிப் பெயரானதேன்??
நாள் முழுக்க காத்து நிற்கும்
சூரியனும் உனக்கானதாய் இன்று
உரிமைகள் பல கொண்டாடுதே!!!
என் பிள்ளைப் பருவம் முதலே
உன்னை ஒரு போராளியாக
கண்டேன்... என் தாய் தமிழினை
தாங்கும் ஒரு பெரும் போராளியாக..
ஒரு அரசியல் தலைவனாய் என்
அறிவுக்கு எட்டியதை விட தமிழை
தாங்கி நிற்கும் ஒரு சாணக்கியனாய்
உன்னை அறிந்தே வியந்தேன்!!
நீ இட்ட தமிழ் வழிப் பாதையில்
தமிழன் என்ற கர்வத்தோடு
நின் தமிழ் சமூகம் நடைபோடும்...
தளராது ஓய்வெடு தமிழ் கட்டுமரமே!!!!!


- Nandhini Murugan

-


8 AUG 2018 AT 17:04

உன்னை எனக்கு பிடிக்கும் தான்!
80 வருட அரசியல் வாழ்க்கைக்காக அல்ல;
50 வருட கட்சித் தலைமைக்காக அல்ல;
13 முறை சட்டமன்ற உருப்பினர் பதவிக்காகவும் அல்ல;
5 முறை முதல்வராய் வழிநடத்தியதற்காகவும் அல்ல;
வாடவிருந்த தமிழை வாழவைத்ததற்காக!
செந்தமிழை செம்மொழியாய் மாற்றியதற்காக!
தமிழை தூக்கி நிமிர்த்தியதற்காக!
தமிழனை தலை நிமிர வைத்ததற்காக!
உன்னை எனக்கு பிடிக்கும் தான்...!

-


8 AUG 2018 AT 19:23

துக்கம் தொண்டையை அடைக்கிறது என்பார்கள்.
முதல் முறையாய் உணர்ந்தேன்!
அண்ணாவின் இதயம் சுமந்து,
சத்தமில்லாமல் சந்தனப் பேழையில்
நீ பூமித்தாயின் மடிக்கு சென்ற போது!
கல்லும் கூட கரையுமே...
நான் மட்டும் எம்மாத்திரம்???!

-


8 AUG 2018 AT 10:10

Kalaignar Karunanidhi ❤️


Tamil Patrioteer
Political Legend
Affable Politican
Master Mind Icon
Intellectual Scholar
Irreplaceable Leader
Silver-Tongued Orator
Excellent Script Writer
Distinguished Administrator
Torchbearer of Dravidian Ideology

June 3, 1924 - August 7, 2018 ❣️

-


7 AUG 2018 AT 20:14

You can hate a person
How much ever you want
But don't forget the
Goodness in him

-


7 AUG 2018 AT 20:27

வலி:-
வென்று வா என்று கூறிய உதடுகள் இன்று சென்று வா என்று கூறிய பொழுதினில்

-


8 AUG 2018 AT 21:36

No matter how great a man or woman leader, time swallows, makes people forget him or her in the deep annals of time.

-