""அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன''
மாணிக்கவாசகர் திருவாசகத்தில்
அன்றே எழுதிய வான்வெளி இரகசியம்!
பொருள் கீழே
⬇️⬇️⬇️⬇️
-
13 APR 2019 AT 21:50
6 JUL 2019 AT 16:05
மணிவரியால் இறைவன் திருவடிப்பாடி
அடிமுடிக் காணவொன்னா பெரும் ஜோதி
விடமேறி உமையிடம் கொண்டு
அடியார் மனமிடைதங்க
கனிமொழி இன்பத் தமிழ்மொழிக் கொண்டு
நெஞ்சுருக்க வரிவரியாய்
திருவாசகம் செய்து
மானுடத்தீங்கு நீங்கி
திருவம்பலத்தான் தாள்
ஜீவகோடிகள் அடைய அருள்தரும்
திருமாணிக்கவாசக குருமணித்தாள்
அடியாருக்கும் அடியேனாய்
போற்றுதும்! போற்றியே!
-
13 AUG 2024 AT 2:35
ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும்
ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய்,
போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்;
நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!
மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!
-
13 AUG 2024 AT 2:30
ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும்
ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய்,
போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்;
நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!
மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!
-