Yuvaraj KR   (யுகவி)
50 Followers · 65 Following

Joined 3 February 2018


Joined 3 February 2018
30 APR AT 21:25

Every work is serving someone!
Work is pressure ,
Service is pleasure !

Keep serving , and get served !!

- YuKaVi— % &— % &

-


24 JAN 2022 AT 18:36

தவறுகள் தவிர்க்காதே
≠==========
தவறுகள் எண்ணி கரைந்து போனால்
வாழ்வில் எதுவும் மிஞ்சுவதில்லை
தவறுகள் நம்மை கரைக்கும் என்றால்
மண்ணில் எவனும் மிஞ்சுவதில்லை
தவறுகள் கடந்து சென்றோம் என்றால்
தவறிய பொழுதுகள் எதுவுமில்லை
தவறுகள் தலை குனிய வைத்தால்
அத்தவறுக்கு உன்வாழ்வில் தகுதி யில்லை
தவறுகள் தான்வாழ்வை கற்றுத்தரும் என்றால்
தவறுகள் செய்யடா
தவறேயில்லை !!

- யுகவி

-


15 JAN 2022 AT 15:33

Time

We pass Time so ridiculously

But

Time passes our life so gracefully !

-


15 JAN 2022 AT 15:20

நேரம்

நாம் அதை சாதாரணமாக கடத்தி விடுகிறோம்

ஆனால்

அது நம் வாழ்வையே சர்வ சாதாரணமாக கடத்தி விடுகிறது .

- யுகவி

-


15 JAN 2022 AT 15:09

புதிய நண்பர். 
அவரும் ஒரு கவிஞர் என்றார் 
நானும் கவிதைகள் எழுதுவேன் என்றேன் 

மகிழ்ச்சி.
என் கவிதைகளை சொல்ல எத்தனித்தேன் 
இவருக்குத்தான் என் கவிதைகளை ரசிக்க முடியும் என நினைத்தேன் 

இல்லை .
நான் பாராட்டிற்கு அலைகிறேனோ 
குறை கண்டுபிடித்து விடுவாரோ 

சரி .
அவராய் கேட்கட்டும் சொல்லலாம் 
அவர் கொடுத்து வைத்திருந்தால் - என நினைத்தேன் 

கை குலுக்கினேன் 
விடைபெற்றேன். . .

இறுதிவரையிலும் அவர் கவிதைகளை படிக்க நான் நினைக்கவே இல்லை !

- யுகவி

-


26 DEC 2021 AT 5:46

உன் மூச்சு என்னை பிரிகையில் 
முத்தங்கள் மிச்சமாகிறது 
உயிர் மட்டும் எச்சமாகிறது 

உன் அன்பு என்னை பிரிகையில்
கனவுகள் மிச்சமாகிறது 
நினைவுகள் யாவும் உச்சமாகிறது 

அடியே- நீ என்னை பிரிகையில்
நேரங்கள் மிச்சமாகிறது
வாழ்வு எனக்கு துச்சமாகிறது !

- யுகவி 

-


13 DEC 2021 AT 12:41

Universe is a bliss-
When you realize
you are also a bit of it !!

-


30 JUL 2021 AT 0:18

சிக்கனம் காட்டியதால் அனுபவிக்க முடியவில்லை
சிதறும் போது சேகரிக்க முடியவில்லை
கிடைப்பது போத வில்லை என்று திருட ஆரம்பித்து விட்டேன்

இதோ காத்திருக்கிறேன் ..
சிரித்துவிடு செல்லமே !

- யுகவி

-


28 JUL 2021 AT 22:59

Its simple -
When you do your bit
everytime, everywhere and for everyone .

Its huge-
When you get back your bit
everytime ,everywhere and by everyone !!

-


13 JUL 2021 AT 22:16

சிமிட்டிவிடாதே
=======================
வெளுப்பின் உச்சமாய்
வெளிச்சமாய்
ஒரு அமானுஷ்ய வீடு -
அடுத்த கனம் எதுவும் நடக்கலாம் என்ற பீதியில் நான் !
கருமையின் உச்சமாய்
கவர்ச்சியாய்
ஒரு அழகு குழந்தை -
அங்கும் இங்குமாய் அலைந்து வந்து கொஞ்சி விட்டு போகிறது !!
ஆர்வம் அடங்காமல்
அடுத்த கனத்திற்கு ஆயத்தமாகிறேன் ..
சிமிட்டிவிடாதே
உன் கண்களை !!

- யுகவி

-


Fetching Yuvaraj KR Quotes