எந்த ஒரு
எதிபார்ப்பும் இன்றி
நேசித்து...😌
அன்பு செய்து...😍
அரவணைத்து ...🤗
மனிதத்தை புனிதமாக்குவதே
காதல்❤️......
அது இதயத்தின் சுவற்றில்
மட்டும் எழுதப்படும்
அன்பின் தாய்மொழி💝💝💝
-
அதுதான் சுவாசக் காற்று..
என்னடி கோபம்
என் மேல் உனக்கு!😣
எனை வறுட மறுக்கிறாய்!
பிரிவில் வதைக்கிறாய்!
ஏனென கேட்க ...
எட்டி உதைக்கிறாய்!😓
உம் இதழின் சூடு
என் இதயத்தில் ஏறுதடி!😢
உனை கட்டித் தழுவத்தான்
என் கண்ணிமைகள்
கதறுதடி.....😭
உதிரம் கொதிக்குதடி....
உள்ளம் துடிக்குதடி.....
எனை கனலில் எரிக்குதடி...
அதில் கனவும் எரியுதடி...!!
சொல்லடி கண்ணே!
என்னடி கோபம்
என் மேல் உனக்கு😣😓😭
-
நித்தமும் நினைத்தேன்
நிம்மதி இழந்தேன்
நெடுநேரம் நடந்தேன்
ஒரு மங்கையின்
மயக்கத்தினாலே......
மறந்தனையோ!
பெண்பூவே!
மை நிரப்பி உனை எழுத
நீ மயங்கி நின்ற
நாட்களையெல்லாம் !
துயில் கொள்ளும் போதெல்லாம்
இமைகளடி நீயெனக்கு!
நான் வாடிநின்ற காலமெல்லாம்
வசந்தமடி நீயெனக்கு!
என் மூச்சு நிற்கும்
தருணம் வரை
அடிமையடி நான் உனக்கு....
என்னை மறந்தனையோ...
மங்கையே!-
அன்பெனும் அம்பு......
நெஞ்சைத்துழைக்கும் போது
இனித்தாலும்.....
தாக்கித் தடயம்
பதித்த பின்
வலியைத் தான்
தருகிறது....
அது!
எதிர்பார்ப்பிற்கும் ....
ஏமாற்றத்திற்கும்.......
இடையில்உள்ள
நூலிழை முறிந்ததனால்
வந்த வேதனை....
-
அவள் என் மகள்
அவளை எழுதும் போது மட்டும்
என் பேனாவுக்கு
காகிதத்தின் மேல் காதல் கூடும்...
கரிச்சான் குருவிகளெல்லாம்
கம்பனைப் போல கவி பாடும்..
என் நாட்களை செதுக்கிய
நாழிகை பிறையவள்...
கற்பனை தேசத்தில்
கலர் பொடி தூவிய மோனலிசா....
என் கன்னக்குழி இரண்டும்
கடுந்தவம் புரிந்தது....
அவள் முத்தத்தின் தீண்டலுக்காக....
இதயக்கதவை இழுத்துப் பூட்டிவிட்டேன்
இனி யாருக்கும் இடமில்லை...
எம் இளவரசி ஜெனித்து விட்டாள்!
என எழுதி விட்டு........-
கண்களிலே நீருமில்லை!
கள்ளியிலே பாலுமில்லை!
ஆதவன் அஸ்தமனமானது...
அன்னைத்தமிழ் மகளும் அறியவில்லை!
செம்மொழிக்கு நாளெடுத்த
திருமகனார் மேனி எங்கே!
முத்தமிழ் சாரெடுத்து....
வைரநடை கவிபுனைந்து
வான்முழக்கமிட்டவரே!
நீ வசந்தம் தந்த வரலாறு....
எம் தமிழுலகக் கவிப்பேறு!
முத்தமிழ் மணாளன்
முத்துவேல் கருணாநிதி.....
-
நீ தந்த வலிகளை
எழுத மனமில்லாமல்
என் பேனா அழுகிறது.....
நீ பேசிக் கடந்த இரவுகள்
இன்று கண்ணீர் ஊற்றெடுத்து
என் கம்பளம் நனைக்கிறது....
உன் நினைவுகள் நெடுநேரம்
நெஞ்சை சிதைக்கிறது....
உன்னை நேசித்திருந்தால்
மறக்க நினைத்திருப்பேன்....
சுவாசித்து விட்டேனே!
என்ன செய்வேன் ....
உன் கால்பதிந்த
எம் கண்ணீர் காயங்களை!
-
உன்னை நினைக்கும் போதே
கண்களில் கவி பிறக்கும்....
தொண்டைக்குள்ளே
குயிலொன்று குடியேறும்.....
கடலோர மணல்வெளியில்
காகிதப் பூ மலர்ந்திருக்கும்....
உன் கண்ணங்குழியோரம்
நான் கண்மூடி
உறங்க வேண்டும்....
உன் மூச்சுக்காற்று என்னை
முத்தமிட்டு அணைக்க வேண்டும்...
உன் மடிமீது சாயும் போதே
மரணம் என்னை தழுவ வேண்டும்
-
என் கற்பனை யெல்லாம்
யாரிடம் விற்பனைக்கு போனதோ
தெரியவில்லை!
வாழ்வின் விளக்கம்
என்னவென்றும்
புரியவில்லை!
தனிமைச் சிறையொன்றில்
சுற்றம் சூழ்ந்த
அனாதையாய் நான்......
-