மாற்றங்கள்
கடினம்தான்.....
ஏமாற்றங்களை
சந்திக்கும்வரை !!!!!
-
யாழின் இசையில்
தமிழின் வழியில்
கவியின் உலகில்
பேசும்
என்னோடு என் பேனா
அன்பாளனாய் நீ - உன்
அன்பிற்கினியாளாய் நான்
இருவேறு துருவங்களில் உதித்த நாம்
இளங்கலை துவக்கத்தில் சந்தித்தோம்
கடின உழைப்பினால் உயர்ந்தாய் நீ வாழ்வில்
கட்டுக்கோப்பினால் நுழைந்தாய் என் மனதில்
வீடொன்று கட்டினாய் எவர் துணையின்றி நீயும்
இன்று அதில் வீற்றிருக்கிறேன் உன் துணைவியாய் நானும்
ஈரைந்து ஆண்டுகள் கடந்துவிட்டோம் நாமும்
கடந்த ஓராண்டில் அரங்கேறியது அந்த மாயம்
சொப்பனத்திலும் நினைக்கவில்லை
நண்பன் நீ
என் நாயகன் ஆவாய் என்று !
சோகத்திலும் உடன் இருப்பேன்
சொர்க்கத்திலும் துணை நிற்பேன்
உன் நாயகியாய் !
என்னவனுக்கு உன்னவளாகிய என்னின்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...
-
மழைக்கும் கண்ணீருக்குமான
இணக்கம்
அவனுக்கும் அவளுக்குமான
காதல் !!!-
வாய்த்த உறவுகள் எல்லாம்
கானல் நீராக இருக்க ....
வரமாய் வந்த அவன் மட்டுமே
இருக்கிறான்
அவளின் உயிராக !-
சரி தவறென தெரியாது...
சில உணர்வுகள்
உதிர்ந்த பின்
உயிர்க்கிறது
கண்ணீராய் !-
உறங்க மறுக்கும் விழிகள்
உரக்க மொழியும் சிந்தனைகள்
நீளும் தனிமையில்
நிலையற்ற மனதோடு
பிறை கரையும் வேலையில்
இரை தேடும் கூகையாய்
இரவோடு போராடும் அவள்!!!-