அழகியலுக்கே அழகு தந்து
அவள் கூந்தலில் வந்தமர்ந்த
ரோஜாவே...♡
அவள் உதிர்க்கும் புன்னகை
மலர் கொண்டு தொடுத்ததா,
இல்லை உன் இதழ் கொடுத்ததா...?
தலை அசைக்க நீயும்
இசைந்து அசைகிறாய்...
நானோ அதில் மெய் மறந்து
அசைவின்றி கிடக்கிறேனே...!
முன் ஜென்மத்தில் என்ன தவம் செய்தாயோ!
அவள் கூந்தலில் வந்தமர்தந்து
முத்தமிட்டு உறவாட...?
இந்நேரம் என் தலைவியின் தலைவிட்டு நீங்கி
மோட்சம் பெற்றிருப்பாய்...!
அடுத்த ஒரு பிறவி இருந்தால்...
பூவே! நீ அவளாகி,
நானோ உன் போல பூவாகி...!
ஒரு முறையாவது உன் கூந்தலுக்கு உறவாகி...
உன் போல மோட்சம் பெற வேண்டும்
ரோஜாவே...♡
-
Yarho
(யாரோ...?)
61 Followers · 26 Following
Little poet✍️
Committed to Searching My Empress...^_^👸🏻🌹
Committed to Searching My Empress...^_^👸🏻🌹
Joined 2 July 2018
9 SEP 2022 AT 3:59
17 MAY 2022 AT 0:15
நிலவு:-
நீ மீண்டும் என்னிடம் வருவாய்
எனத் தெரியும்...
ஆனால் இவ்வளவு சீக்கிரமாக
வருவாய் என எதிர்பார்க்கவில்லை...
சரி, எங்கே அவள்...?
-
5 APR 2022 AT 1:17
கவிதைகள் ஆயிரம் எழுதிடத்தான்
எண்ணங்கள் எழுகிறது என்னுள்ளே...!
மானே...
மதியே...
மை வரைந்த விழியே
விண் நிறைந்த ஒளியே
என் கண்மணியே...!
-
5 APR 2022 AT 1:14
இரவு நிலா வெளியில் வர தயங்குதடீ
இனியவளே! நீ அங்கே நிற்கிறாய்,
கனிரச சுவையமுதாய் கண்ணம்மா!
நீ என் மனதில் நிற்கிறாய்.-
5 APR 2022 AT 1:11
கொடி வடிவாய் இடைபடைத்த
கோடி கோடி குழலியர்கள் இங்கு இருக்க
ஈடில்லா அழகுடையாம் நீ என்பேன்...!-
19 FEB 2022 AT 17:14
என்னவனே என எழுத தொடங்கி
இதை விட அழகான கவிதையாக எழுத வேண்டும் என
நீ கசக்கி போட்ட அந்த காகிதத்தை
விட ஓர் அழகிய கவிதையை
இதுவரை நான் கேட்டதில்லை...!-
2 FEB 2022 AT 16:18
நிலவை நோக்கி கோடி காதல் கடிதங்கள்,
நட்சத்திரங்கள்...!
நிலவோ சம்மதம் சொன்னது
எனக்கு மட்டும்...^_^♡-