கொலையைவிட
குற்றமானது
தற்கொலை!
-யாழ் அகத்தியன்-
அன்போடு கேட்டுக் கொள்கிறேன் நன்றி.
read more
தொட்டியின் அளவு
சிறிதானாலும்
மீன்களுக்கு
வாழும் இடம் கடல்தான்!
-யாழ் அகத்தியன்-
உண்மை
செல்லாக்காசான பின்
அது
மிதிபடாத கால்களே இல்லை.
- யாழ் அகத்தியன்-
என்னையும் ஒன்றாக கூட்டிவிட்டு
கடைசியில் கழித்துவிடுவீர்கள் என்றால்
நான் பூஜ்ஜியமாகவே இருந்துவிடுகிறேன்
-யாழ் அகத்தியன்
-
என் மீது நீங்கள் கல்லெறிவீர்கள்
என்றுதான் என் கிளைகளில்
எந்தப் பறவைகளையும் கூடு கட்ட
அனுமதிப்பதில்லை!
-யாழ் அகத்தியன்-
என்னைச் செதுக்கும் பொறுப்பை
மனதிடம் கொடுத்த பிறகு
கல்லாக நான் மாறுவதுதானே சரி!
-யாழ் அகத்தியன்-
எந்த ஆயுதங்களோடு வந்தாலும்
என்னைத் தொலைப்பதாயில்லை
யாரிடமும்!
-யாழ்_அகத்தியன்-
நீ தூரம் செல்லும் போதெல்லாம்
நான் தொலைந்துவிடுகிறேன்
தயவு செய்து அருகில் வா
கிடைத்துவிடுவேன் நான்!
-யாழ் அகத்தியன்-
கத்தியை விட கூர்மையானது
உங்கள் வார்த்தைகள்
தேனை விட இனிப்பானது
உங்கள் வார்த்தைகள்
எதைப் பேசுவதாக இருந்தாலும்
உங்களுக்கு இனிப்பாக
இருந்தால் மட்டும் பேசுங்கள்.
-யாழ் அகத்தியன்-
கத்தியை விட கூர்மையானது
உங்கள் வார்த்தைகள்
தேனை விட இனிப்பானது
உங்கள் வார்த்தைகள்
எதைப் பேசுவதாக இருந்தாலும்
உங்களுக்கு இனிப்பாக
இருந்தால் மட்டும் பேசுங்கள்.
-யாழ் அகத்தியன்-