be ready
at your boarding,
your train will come to you!
-
:
Follow me on insta:
👇👇👇
தோல்விகளை
தோள்பையுள் தொலைத்திடு!
வெற்றிகளை
வேர்வையில் துளிர்விடு!
பயணிப்பதே பணி,
பிணிகளை களைந்து பயணி!
-
ஆயிரம் தடைகளை கடந்திடு
ஆயினும் விடைகளை களைந்தெடு
வாழ்க்கை ஒரு சீட்டுக்கட்டு
கணந்தோறும் உன்னை மாற்றும்
கனமாக்கி நெஞ்சைக் கீறும்
கேள்விகளை எல்லாம் விடைகளாக்கு
வேள்விகளை உந்தன் உடைகளாக்கு
வா!
புயற்காற்றில் ஒரு
குருவிக்கூட்டைக் கட்டித்தான்
பார்ப்போம்!-
இவ்வளவு புழுக்கத்திலும்
உன் குரலெழுதும் வசனங்கள்,
மழைக்காலத்தையே
எனக்குத் தருகின்றன!-
எனக்கு கவிதை எழுத
மட்டுமே தெரிந்திருக்கிறது!
உன்போல கவிதையாவதற்கு
நான் என்ன செய்ய வேண்டும்?
-
சிலம்புகொள் ஏந்திழையுன்
புலம்பெயர் தஞ்சமாம் யென்நெஞ்சில்
நிலமேந்தி நின்னுடலைத் தாங்கி
யானுறங்கும் கணம் யௌவனம்!-
கண்கள் வேண்டுமா
கைகள் வேண்டுமா
என்கிறாய்?
காதலிக்க கண்களும்,
காலம் முழுதும் கரங்களும்,
வேண்டும்!
-
கண்ணீரையும்
புன்னகையையும்
ஒருசேர சுமந்து கொண்டு
நகர ஆரம்பிக்கிறது!
வழியனுப்பிய
இரயில் வண்டி!
குயிலைப்போல் கூவுவது
"கூடு செல்கிறேன்
விடியலில் சந்திக்கிறேன்"
என்பதற்கா?
-