வலியின்_ வரிகள்  
15 Followers · 7 Following

எனக்கான ஒரு ஆசை...💙
Joined 13 May 2020


எனக்கான ஒரு ஆசை...💙
Joined 13 May 2020

உன் கண்ணிமைக்குள் பிம்பமாகவும்
உன் கண் எதிரே கம்பனாகவும்
நிற்கிறேன்...உன்னிடத்தில்
காதல் கவிபாட💙

-




நீ என்னை கன்னத்தில் கிள்ளி
தவறு செய்யாதே என்று சொல்வதற்காகவே
தெரிந்தே தவறுகளை
செய்கிறேன் நான்...
மீண்டும் மீண்டும்...💙

-



காத்திருப்பதும் காக்கவைப்பதும்
தான் காதல் என்றால், நாம்
அதில் முனைவர் பட்டம் வாங்கியவர்கள்...
காத்திருப்பதில் நானும்
காக்கவைப்பதில் நீயும்💙

-



நெருக்கம் என்றால்
சுவாசிக்கவும் முடியாமல்
பேசிக்கவும் முடியாமல்
இருக்கவேண்டுமாம்
அப்படி பார்க்கையில்
சற்று தொலைவில்தான் உள்ளது
நெருக்கம் நம் இருவருக்கும்...

-



ரிப்பன் கட்டிய பரிசுப்பொருள்
அவளின் ரெட்டைஜடை...

எனக்கே உரியதாய்
ரெட்டைஜடையும் அதன் சொந்தக்காரியும்💙

-



உன்னிடத்தில் என் காதல்
ஏற்படுத்திய தாக்கம்
ஒரு தலை காதலின்
முன்னேற்றம்...

-



உன்னிடம் பேசுகையில் மட்டும்
அணைத்து வார்த்தைகளும்
தோற்றுபோகுதடி
நீ சொல்லும் "ம்ம்ம்"மிற்கு முன்னாள்...💙

-



இப்பொழுதுதான் விளங்குகிறது
என்ன நடந்ததென்று
அவள் விலகியபின்...
அவளுக்கு விளங்கி இருந்தால்
விலகி இருக்க மாட்டாளோ என்னவோ...

-



காயங்களுக்கு மருந்தாக
நான் இருப்பேன் என்றாய் நீ
என்றோ ஒருநாள்...
இன்று காயங்களே உன்னால்தான்
என்று எப்படி எடுத்துரைப்பேன்...
தேவதையே...💙

-



உந்தன் ஆசைகள்
எந்தன் கனவுகள்...
உந்தன் நினைவுகள்
எந்தன் காவியங்கள்...
உந்தன் சொற்கள்
எந்தன் வழிமுறைகள்...
உந்தன் வாழ்கையே
எந்தன் உறைவிடம்...💙

-


Fetching வலியின்_ வரிகள் Quotes