நீண்டு நிலைக்கிறது
இந்த தனிமை
அவள் விட்டுச் சென்ற புன்னகையுடன்-
அவள் என்னை
விலகிச் செல்வதாய் நினைத்து
என்னை அவளை இன்னும் அதிகமாக நினைக்க வைக்கிறாள்
உள்ளே என் எண்ணங்களில்
குடியேறி விடுகிறாள்-
உன் ஒற்றை கூந்தலும் அதில் முடிந்த என் இதயமும்
என்னை விட்டு சென்ற அந்த பாதச்
சுவடுகளும்
-
வாஞ்சை கொண்டு
வாரியனைத்து
மடி கிடத்தித்
தலை கோதி
பிடித்த உருண்டைச் சோறு
வாய்க்குக் கிட்ட
இறங்கும் தொண்டைக்
குழியில்....
இதயம் மலரும் தருணம்-
தொடரும் இந்த
தொலைபேசி அழைப்பில்
உன் ம்ம்ம் இன்னும் அதிகமாக ஒலித்தாலும்
என் கற்பனையில் வார்த்தைகள்
பஞ்சமாய் போனாலும்...
உரையாடல்கள் எப்போதும் தீர்வதில்லை
-
என் அகராதியில் இல்லாத
சொற்கள் நிரப்பிய
ஒரு புதுக் கவிதை
புத்தகம் போல நீ....-
நட்சத்திரம் ஒவ்வொன்றும்
வார்த்தையாக
பிறப்பதாலோ
என்னவோ
தெரியவில்லை
உன்னை காணும் போதெல்லாம்
ஓடி ஒளிந்துகொள்கின்றன-
அவள் புன்னகை
அவள் பார்வைகள்
அவள் எத்தனிப்புகள்
அவள் எதிர்பார்க்கைகள்
அவள் எதிர்காலம்
அத்தனையும் என்
எல்லைகளுக்கு வெளியே
அவள் தந்த ஏமாற்றங்களும்
அந்த நினைவுகளும்
எல்லா வித எண்ணங்களுக்கும்
எல்லை என்றாகிட...!-
அவள் கணங்களின் காவலனானேன்
அவளுக்குள் என் சுவாசம் கடத்தினேன்
அவளுக்கு நான் ஆடையானேன்
அவள் என் யாதுமாகினாள்
அந்த கூரை இடிந்தது போல்
அந்த இருளில் அவள் மறைந்தே போனாள்-