எண்ணியவை ஈடேற..
எல்லா உயிர்களும் இன்புற..
நல்வழிகாட்டு விநாயகா.
நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்.
-
மூத்தக் குடிகள் எப்படி இருந்திருக்க கூடும்,
பாசிசம் நம்மை எப்படி அறிவிலியாக்க முயற்சித்தது,
முதலாளித்துவத்தின் உழைப்புச் சுரண்டல்,உயிரை துச்சமென போரிடும் நம்மினத்தின்
போர்த் திறம்,
எதை பாதுகாக்க வேண்டும்..?
எதனால் அடிமைப்பட்டுக் கிடந்தோம்..?
நம் ஆதியோனின் வளத்தை நம்மிடமிருந்தே பறித்தது மட்டுமின்றி, நம்மை வைத்தே அபகரிக்க நமக்கு கூலி கொடுக்கும் செயல்பாட்டை, அரசியலை , நீதியை குருதி சிந்தி எழுதிச் சொல்கிறான்.
தங்கலான்...✍️-
கவண்டன் எனவும்
ஐயன் எனவும்
சத்திரியன் எனவும்
சக்கிலியன் எனவும்
சாதியை பெருமையாகவும்
சிறுமையாகவும் பார்ப்பவர்கள் சுதந்திர தினத்திற்கு மரியாதை செலுத்துவதற்கு எந்த அருகதையும் இல்லை.
இவன் வடக்கன்
இவன் துலுக்கன்
இவன் அல்லேலூயா
என்று பாகுபாடு பார்க்கும் வரை உண்மையான சுதந்திரத்தை உணரமுடியாது.
யாவரும் மனிதர்களே.
சுதந்திர தின வாழ்த்துக்கள்
-
எல்லா சூழல்களையும் எதிர் கொள்கிறவர்களின் மனப்போக்கிற்கு முன்...
எதிரிகள் எதை செய்தாலும் வீணே...-
உங்களை சரியாகவோ அல்லது தவறாகவோ யாராலும் வடிவமைக்க முடியாது. அவ்வளவு ஏன்,உங்களாலும் கூட உங்களை மாற்றியமைக்க முடியாது என்பதே இயற்கையின் கட்டமைப்பு.
-
உங்களுக்கு தொடர்பில்லாத எந்தவொரு நிகழ்வும் உங்களுக்கு நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.
பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஏழாவது அறிவினாலும் கூட எட்ட முடியாதென்பதே இயற்கை.-
வரவேற்கப் படுவதை அற்புதமெனவும் , நிராகரிக்கப் படுவதை
அதி அற்புதமெனவும் உணரவே ஒரு தவநிலை தேவைப்படுகிறது.
நடந்தவை யாவும் நல்லவையே...-
முத்தங்களாலும்
வியர்வைகளாலும்
உடல் பூக்கும்
காலந்தொட்டு..
வற்றிய மார்பில் சாய்ந்தபடி,
நெற்றியின் ரேகையை
எண்ணியபடி...
பொக்கை வாயில்
புன்சிரிப்புடன்...
வாழ்ந்ததை
அசை போட்டபடி..
உயிர் உதிரும்
காலம்வரை
பிணைந்திருத்தலே.
"காதல்"-
அப்படியொன்றும் பெரியதான வசதியோ,
பண மூட்டைகளோ அவசியப் படுவதாய்
தெரியவில்லை. குழந்தைகள் விரும்பும் தின்பண்டங்களின் விலையை கேட்காதவொரு மனநிலையும் , கையிருப்பும் நிரந்தரமானாலே போதுமானதென்கிறது நடுத்தரங்களின் மனது.-
அப்படியொன்றும் பெரியதான வசதியோ,
பண மூட்டைகளோ அவசியப் படுவதாய்
தெரியவில்லை. குழந்தைகள் விரும்பும் தின்பண்டங்களின் விலையை கேட்காதவொரு மனநிலையும் , கையிருப்பும் நிரந்தரமானாலே போதுமானதென்கிறது நடுத்தரங்களின் மனது.-