Vivek Bharathi   (விவேக்பாரதி)
1.8k Followers · 74 Following

கவிஞன் | Poet | இதழியலாளன் | Journalist
Joined 10 March 2017


கவிஞன் | Poet | இதழியலாளன் | Journalist
Joined 10 March 2017
29 JUL 2023 AT 2:50

தெளிவான சிற்றோடையின்
நடுவே கிடந்து
திடீரென
வான் பார்க்கக்
குப்புறக்கத் திரும்பிவிட்ட
கூழாங்கல்லின் நடுவில்
பச்சையாய் இருக்கிறது
என் முகம்!

சில குட்டி மீன்கள்
கண்வரை முத்தமிட்டுப் பார்த்துக்
கன்னம்தான் பிடித்திருப்பதாகத்
தின்று கிளம்பியதால்
அந்தப் பச்சையப் படத்தில்
எனக்குக் கன்னங்கள் இல்லை!

நெற்றியின் நடுவே
இயற்கை இட்ட முத்தமாய்
அந்தக் கல்லின்
இயல்புத் தேமல்!

கொஞ்சம் கீழே…
உங்கள் உதடுகளைக் குறிவைக்கும்
என் கோணல் மூக்கின்
அடிவாரத்தில்
பிரகாசமாய்ப் படந்திருக்கிறது
வான் பார்க்க நான் மீண்ட
புன்னகையின் அகண்ட காவிரி!!

-


29 JAN 2022 AT 15:31

கடல் நீரை
மேகம் குடிக்கும் என்பார்கள்...
பார்த்துச் சிரிப்பது வரை பார்த்துவிட்டேன்
இனி குடிப்பதுதான் மிச்சம்
வெண்மேகமே

-


29 NOV 2020 AT 22:05

வார்த்திடும் நெய்யில் வளர்ந்திடும் ஜோதி, வடிவங்களாய்
ஆர்த்திடும் வானத்(து) அழகுவேடிக்கை அளவுடனே
வேர்த்திடும் மேகம், விளையும் ஒளிமயம் வீதியெல்லாம்
கார்த்திகை வந்ததைக் காட்டிட நெஞ்சம் களித்ததின்றே!!

-


14 JUN 2017 AT 9:58

Love to write ! And
Write your love !
Either you can
Become a writer
Or else
You can become
A lover !
But write always
And
Write your heart !
Because,
None can see your
Heart and love you
But
Everybody can see
Your writings !

-


29 NOV 2020 AT 6:47

பார்க்கிறேன்,
அது
மறுபடி மறுபடி கத்தி
நினைவுப் பாம்புகளின் வாயில்
சிக்கிக் கொள்கிறது!
நுணல் மட்டுமல்ல
மனமும் தன்வாயால் கெடும்...

-


29 NOV 2020 AT 6:44

உன்
நினைவுக்குத் தெரியாது
இறங்கும் அந்த மின்னல்
ஏற்கனவே பெரும் புயல்களில்
பட்டுப்போன மரத்தை
அது பதம் பார்க்கிறதென்று...

காய்த்த மரம்தான் கல்லடிபடும்
நான்
உன் சொல்லடி பட்டுக்
காய்ந்த மரம்...

-


29 NOV 2020 AT 6:41

விடத்தான் முடியவில்லை...

நினைக்காமல் தூங்க,
கடக்காமல் வாழ,
பார்க்காமல் போக,
பழகாமல் சாக...

-


29 NOV 2020 AT 6:36

பிழைத்திருந்தது காதல்,
சுற்றிய அர்த்தமற்ற பயணங்களில்
சுகித்திருந்தது நட்பு,
அர்த்தம் கண்டறிய பார்த்தேன்...
முதலில் விலகியது நட்பு
என்னை முட்டாள் என்றது காதலுமே

-


25 NOV 2020 AT 23:16

சேர்ந்தெழுதிய கவிதைகள்,
ஊர் சுற்றிய இனிமைகள்,
அள்ளித் தின்ற வாசங்கள்,
அணைத்துக் கொண்ட பாசங்கள்,
தட்டிக் கொடுத்த திருப்பங்கள்,
கிட்ட இருந்த சறுக்கல்கள்,
பகிர்ந்து கொண்ட அனுபவங்கள்,
பார்த்து சலித்த சினிமாக்கள்
நண்பா,
நீ அருகிருந்தும் தூரம் உணரும்
நெடுங்காலமாய்
உன் நினைவுகள்..

-


29 OCT 2020 AT 7:01

நஞ்சுண்ட நாதனே நலம்வாழ வழியினை
நல்கிய தவளே என்றால்
செஞ்சுண்ட வினையுனைச் சூழாமல் வாழ்ந்திட
செம்மையாம் வழியும் அவளே...
மஞ்சுண்ட கடலையே மழையென்று பிழிபவள்
மனமுனைப் பிழிந்தி டாளோ
பஞ்சுண்ட தீயெனப் பவமிற்றுப் போவதைப்
பார்க்கவும் கூடும் மனமே!!

-


Fetching Vivek Bharathi Quotes