I am slowly realising that
I am a boring character so that
the people leave me-
(hearts too)
உரையாடல்களை
தொடரும்போது
விருப்பு வெறுப்பு
அறிதல் நன்று!
இல்லையெனில்
பேச வேண்டாம்
என எண்ணுபவரை
கட்டாயப்படுத்தி
பேச வைத்தல்
ஆகிவிடும்!-
உறவாயினும்
உறவினராயினும்
நண்பனாயினும்
எதிரியாயினும்
அண்டையர் ஆயினும்
சமுதாயம் ஆயினும்
ஆலயம் ஆயினும்
இடுகாடு ஆயினும்
"தகுதி வரையறை"
உண்டு என்று
இந்த உலகம்
புரியவைத்து கொண்டே இருக்கும்!
-
விவரம் அடங்கிய புத்தகம்
ஆனால்
விவரம் அறியா புத்தகம்
விவரத்தை அறியும்படி செய்யும் புத்தகம்
ஆனால்
விரயம் செய்யப்படும் புத்தகம்
விவரம் அறியாதது புத்தகத்தின் தவறோ?
விரயம் செய்வது செய்பவரின் தவறோ?-
விதிகள் வாரும்முன்
விதைகளை தூவிவிடு
கிடைத்தால் வெற்றி
இல்லை எனில் பாடம்!-
உறவுகள் ஆயிரக்கணக்கில்
நண்பர்கள் நூற்றுக்கணக்கில்
ஆயினும் நீ தனிமை கணக்கில்!-
வாழ்க்கையின் பாதையில்
புரண்டு ஓடுகையில்
கரை ஏற மறந்துவிட்டேன்
இத்தனை நாட்களில்...
கரை காண்கிறேன் இன்று
வணக்கங்களுடன்!-
Is there anyone who uses mobile or waste time knowing that something uncertain is going to happen? If anyone, 🙌
-