ஏன்?
அவ்வளவுதான் கேள்வி
விளக்கங்களும் இல்லை
விடைகளும் இல்லை
சில விஷயங்கள் அப்படித்தான்
கடந்து செல்வோம்
கண்ணீரோ புன்னகையோ
அவரவர் மன வலிமைக்கேற்ப...-
என் முதல் நீயில்லை ஆனால்
இன்று என் முதலும் முடிவும்
நீயாகவே இருக்கிறாய... read more
ஆருயிரே...ஆருயிரே
அழுதால் கூட
வாரா வலியோ
கண்ணீர் கூட-இனி
கல்லின் நிலையோ
நீயில்லா தனிமை...,
ஏற்க்கும் இதையோ.
ஆருயிரே...ஏ ஏ ஏ...ஏ...
சுற்றும் காற்றின்
சுதந்திரம் எது?
வீசும் காற்றின்
கலவரம் அது.
ஆருயிரே.......
இது நிறையோ முறையோ...?
இறக்கை விரிக்கும்
இறகின் வலியோ.
வலியை மறைத்து,
விழியை விரித்து.
கடந்துச் செல்ல
கால விதியோ...?
ஆருயிரே...ஆருயிரே-
கேட்காதோ...கேட்காதோ
அன்பின் அலறல்
கேட்காதோ...
உன் காதல் கருவறையில்
என் நியாபக அலைகள்
மோதாதோ...
வெயில் இல்லா ஒளி போலே
நிஜம் இல்லா
நிழல் ஆனேன்...
நிறம் இல்லா
வானவில்லாய்
நீயில்லா நானாவேன்...
சுதந்திரமாய் சிறையிருக்கும்
பறவைக் கூண்டின்
கிளி போல
உன் நினைவின் வலிகளுக்குள்
நான் தவிப்பேன் தனியாக...
கேட்காதோ...கேட்காதோ
அன்பின் அலறல்
கேட்காதோ...-
மேடு,பள்ளம்
காட்டு வெள்ளம்
உன்னைச் சேர
பல தடைகள்,அதில் நீயும்
உற்று நோக்க
ஒரு நொடி
உனக்கடி
விழுந்த நானும்
எழும்பிட
ஒரு யுகமடி
கற்றுக் கொண்ட
காதல் அதை
கொட்டித் தீர்க்க
ஓர் தனிமையினை
நெஞ்சம் இறங்கி
நீ ஒதுக்கு
உன் நெஞ்சம் அதிலே
என்னை அமர்த்து
தொட்டுச் செல்ல
தென்றல் வரும்
நீங்கா நினைவுகள்
அதில் மலரும்
நீயும் நானும்
கதைப்பது போல்
காதல் இங்கு
எதில் வளரும்-
விண்ணிலிருந்து வந்து
மண்ணில் விழுந்த துளி போல
என்னில் நீயும் விழுந்தாயே
உயிர்த்துளியே,என்னுயிரே...
செல்லும் இடமெல்லாம்
உன் வாசம் வீசி நிறைத்தாயே
என்னவளே,என்னைத் தொடர்ந்தாயே...
விரல்கள் கோர்த்து பேசும்
உன் நேசம் என்னும் பாசம்
தருவாயா? இல்லை
உன் விழிச் சிறையில்
என்னை விடுவாயா?
வீசும் காற்றில் ஆடும்
பட்டம் போலே நானும்
என்னை,கட்டியிழுத்துக் கொண்டு
உன் கட்டுக்குள் வை எந்நாளும்
வருவாயா?,நீ,வருவாயா?-
கைகள் கோர்த்து
காற்று வீச
நகர்ந்த காதலே
ஆழியெங்கும்
வீசும் காற்றில்
உன் நினைவின் நிஜங்களே
கரையை தீண்டும்
நுரையைப்போல்.,
என்னைத் தீண்டினாய்
காலந்தோறும்
என் சுவாசமாக
நீயே மாறினாய்
இனியொரு தொடர்கதை
இது ஒரு விடுகதை
என் நெஞ்சில் வேறாரடி
விண்மீனும் ஒளி வீச
நள்ளிரவில் கதை பேசும்
வெண்ணிலவும் நீதானடி-
பதியுதே பதியுதே
காதலின் ஆழங்கள்
அழிக்கவே நினைக்குதே
உன் ஞாபக நினைவுகள்
விழி எனும் வழி வழி
வழியுதே கோபங்கள்
நில்லாதே...
நீயில்லா கோபங்கள் நில்லாதே...
செல்லாதே...
உன் ஞாபக நினைவுகள் இனி செல்லாதே.-
அன்று
என்னை மட்டும் கேட்டது.
அவளது காதல் கடிதம்
தந்தேன்...
இன்று
என்னைத் தவிர,அனைத்தையும் கேட்கிறது.
விவாகரத்து கடிதம்
தருகிறேன்...
கேட்பது தான் வேறு வேறே தவிர
கேட்பவள் அவள் தானே
தந்து விட்டுப் போகிறேன்
என்னால் முடிந்த காதலை
ஒரு கையெழுத்தாக.-
கல்லுக்கு
பாலையும் தேனையும்
ஊற்றிவிட்டு
பசிக்கு பிச்சை போடுகிற
நாய்கள் தானே
இந்த மனிதர்கள்
என்று சொன்னால்
கோபம் வருகிறது
இந்த நாய்களுக்கு.,
ஏனென்றால் அதுக
அப்படியில்லையாம்
நன்றி உள்ளதாம்
இதில் நாய் யார்?
நாம் யார்?
அறிந்தவன் கேட்க மாட்டான்
கோபமாய் கேட்பவன்
அறிந்திருக்க
தாம் என்பவரெல்லாம் நாம்தானே-
கரு முதல் கல்லறை வரை
பாட்டில் புரியாதது
ஏட்டில் புரியும்
ஏட்டில் புரியாதது
வீட்டில் புரியும்
வீட்டில் புரியாதது
ரோட்டில் புரியும்
ரோட்டில் புரியாதது
காட்டில் புரியும்
எல்லாம் புரியும் போது
புரிந்ததெல்லாம் பிரிந்திருக்கும்
இப்படியிருக்க
ஏன் எல்லாம் புரியனும்
புரியாமலே இரு(ற)ந்துவிட்டு
போவோமே
வாழும் வாழ்வை இனிமையாய்
வாழ்ந்துவிட்டு வீழ்வோமே (யாருக்காக?)
ஆம் வாழ்க்கை
ஒரு போர்க்களம் தானே
யாருக்காக?
வினாவும் உன்னிடத்தில்
விடையும் உன்னிடத்தில்-