Vino Ela   (Vino❣️thini)
697 Followers · 17 Following

Wish on me 🥰❤️21 jully
Joined 20 July 2020


Wish on me 🥰❤️21 jully
Joined 20 July 2020
1 NOV 2022 AT 15:15

நீ வரைந்து காட்டு
என்னுள் மறைந்துள்ள அந்த முகத்தை
அடைய முடியாத அந்த இரவை
இன்னும் வெளிப்படாத அந்த கனவை
பூக்க விருக்கின்ற அந்த காதலை
கண்டு வரைகின்ற திசையை
சொல்லி விட்டு
நிலவின் கதவை திறந்து
நீ வரைந்து காட்டு
கொஞ்சமும் குறையாத என்னை.

-


16 OCT 2020 AT 10:56

கூர்வாளால் வெட்டப்பட்ட
இரவுக்குள் பிதுங்கி வெளிப்படும்
வெளிச்ச சிதிலங்களாய்
தெரிகிறது உன் முகம்...
வால் நட்சத்திரம்
பூமியை கடக்கும் போது,
பூமிக்கு ஒவ்வாத
சில நுண்ணுயிரியை
தூவி விட்டு செல்வது போல்,

எனக்குள்ளும் உன் காதல் நுண்ணுயிரி
தோண்டப்பட்ட இரத்தக்குழிகள்.
விரிசல் விட்டதற்கு
அடையாளமாய் இருதயம்
பூராவும் இரத்த விளாறுகள்.

திறந்து இருந்த
இரத்த நாளங்களின் வழியே
அது நுழையும்போது ஏற்பட்ட
அவஸ்தை உறைந்து
போயிருந்தது.... எனக்கு.

-


30 JUL 2020 AT 22:39

அவன்பொருந்திய ஞாபகம்
கொணருகையில்
உயிர்பிழை என்று
நாடியை பிடுங்கி வீசும்
இதயத்திற்கு

அன்பின்சாபம் ஏற்பது
என்னவோ?
என் உயிர்த்துவகாதல் தான்
.

-


21 OCT 2021 AT 20:31

வெவ்வேறு பாதைகளில்
நான் விலகி சென்றாலும்
என் பின்னிலும்!!
எதிரிலும்!!
நீயேதான்
வந்துகொண்டிருக்கிறாய்
என்றது
கனவுகள் கண்டெடுத்த கண்கள்..

ஏனோ!!

தன்னை தழுவிக்
கொண்டிருக்கும் என் நிழலை
விவரம் புரியாது
விரட்டிக் கொண்டிருக்கிறது
இந்த வெயில்கள்....





-


21 OCT 2021 AT 1:20


சிரிப்பை
பொருத்திக் கொள்கிறேன்
வேண்டாமென முகத்திலிருந்து
பிடுங்கி எரிகிறாய்..!
இன்னொன்றை
வைத்துக் கொள்கிறேன்
அதையும் எறிகிறாய் பிடுங்கி..!
இப்படி என் முழு நாளையும்
நீயே காலி செய்கிறாய்...!

என் பொருத்தமற்ற
வாழ்வுக்கு
நீ பொருத்தும்
அகராதிக்காகவாவது
நான் என் நடிப்பை
நிறுத்திக் கொள்ள வேண்டும்
இனி...!!


-


14 SEP 2021 AT 23:36

கறுத்த மேகத்தின் திரட்சி
தாங்காது வானம்
பூமியில் சாயும்..
மணல் பூத்த
மழை வாசம்
மனதோடு இசையை
கோர்க்கும்....
கனவுகள் வந்து
கூப்பிட்டு போகும்
இதயத்தை
வண்ண காற்றுகள்
நொடி நேர அரைவட்டமாய்
அதனை அளந்து அளந்து பார்க்கும்.....ஆயினும்....
இந்த மனம்
பட்டுப்பூச்சி போல்
இலகுவாகி
ஆயிரம் கவிதைகளோடு
உறங்கி தான் கிடக்கிறது இங்கு ......

ஏனோ...
திசைமுடிவுக்கு தெரிவதெல்லாம்
இந்த நள்ளிரவு மழையின்
புணர் நாணத்தின்
மிச்சமோ!! என்னவோ!!
இருக்கலாம்!!!!

-


30 JUL 2021 AT 13:42

நெருப்பு மூட்ட
கிழித்த தீக்குச்சிக்களையெல்லாம்
காற்று வந்தணைக்கும்..
காப்பாற்ற வெளியிலோ
வட்டமாய் நெருங்கி
காப்பொன்று அமைக்க
யாருமில்லை போலும்...

எதிரீடுகளின் சதுரங்கமாய்
காதலும்!! காமமும்!!கொண்டு
அவைகள் உரசிக் கொண்டு
விளையாடுவதை
யார் தான்
அறிவதோ இங்கு??

-


17 MAY 2021 AT 14:30

வர்க்கமாய் நின்ற மனித இனம்
இன்று;
நேர்ந்துகொண்ட வாழ்வென்று நெஞ்சோடு
கைவைத்து பிடிக்கிறது;
சற்றே நெரிப்பட்டமனதாய்
அசைந்து கொண்டு
வெறுமையோடு நம்மை இழுத்து
நடக்க தொடங்கும் முன்,

துயர்க் கடல்வீதியாய்
கொரோனா அலைவீசுகிற போது
தலைகளுக்கு உயரே
இது எனது; இது எனது; இது எனது என்று.....
அண்ணாந்த முகங்களுடன்
நெருக்கடித்து கொள்ளும் கூட்டமாய்
அலைமோதுகிறது இந்த உயிர்
இப்போது....

-


11 FEB 2021 AT 19:41

தூர்ந்துபோகாத நிலத் தட்டில்
ஆயிரக் கணக்கான முறைகள்
ஒட்டி நெளிந்து
பிசுக்கிட்டு மணக்கும்
நைலான் காற்றோடு
முற்றிலுமாக வடிந்து
முடிக்கிறது நம்
காலத்தின் இரவுகள்..

அதனதன் வழியில்
அதனதன் பொருட்டு
செல்லும் காலம்
இருக்கும்போது
நமக்கென்ன ?

நாமும்
சில சமயம்
சும்மாவாகவே இருந்து
விடுவோம்!!!!


-


4 FEB 2021 AT 19:54

...
👇

-


Fetching Vino Ela Quotes