Vinayaga Vicky  
25 Followers · 10 Following

நான் நானாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்
Joined 8 February 2018


நான் நானாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்
Joined 8 February 2018
5 OCT 2024 AT 9:06

அவர் கஷ்டம் என்று வந்து நின்ற போது கைக்கொடுக்காதவர்கள்... பின் அந்த கஷ்டத்தினால் அவர் நொந்து இறந்த பிறகு.. ச்ச்ச...! அவர் இறந்தது ரொம்ப கஷ்டமா இருக்கு என்று வருந்திக் கொண்டே அந்த உயிரற்ற உடலை தூக்கி பாடையில் வைக்க ஒரு கை கொடுத்தார்கள்....

-


7 SEP 2024 AT 17:31

ரோட்டு ஓரக் கடைகளில் களிமண்ணால் ஆன பிள்ளையார் சிலை விற்பனை பரபரப்பாய் நடந்தது... விற்பனை செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளெல்லாம் அவரவர் வாங்கிய வீடுகளில் தெய்வமானது... விற்பனை ஆகாத சிலைகள் அடுத்த நாள் பானை செய்ய இருக்கும் களிமண்ணோடு மீண்டும் மண் ஆனது...

-


15 JAN 2023 AT 10:07

அந்த அக்கா இம்முறை கோலத்திற்கான முதல் பரிசை தட்டிவிட வேண்டும் என்பதால் பொங்கலுக்கு முன் வாரத்திலிருந்தே பயிற்சி கொண்டு வந்தது. தொட்டில் கோலம், தேர்க் கோலம், துளசி மாடம், கம்பி கோலம் இதில் எது என்ற குழப்பத்திலிருந்து தனிந்து பொங்கலன்று தன் வீட்டு வாசலில் ஓர் தேர்க்கோலம் போட்டு அதன் அருகில் பானை,கரும்போடு பொங்கல் வாழ்த்தும் எழுதி இருந்தது. கோலத்தின் மேல் தன் நேர்த்தியை அழகாய் போர்த்தி இருந்தது அந்த அக்கா.பார்வையிட்ட பார்வையாளர்கள் "வாவ்"..! என்று வாயை பிளந்தனர். அடுத்த வீட்டு வாசல் கோலத்தை பார்க்க பார்வையாளர்களின் கால்கள் நகரத் தொடங்கியது. நகர்ந்த எந்த கால்களும் கடைசிவரை அக்காவின் "இனிய பெங்கல் வாழ்த்துக்கள் " வாசகத்தில் பொங்கலுக்கு கால் இல்லை என்பதை கண்டறியவே இல்லை.

-


15 DEC 2022 AT 10:21

பெரும்பாலான இசை கலைஞர்கள், நடிகர்கள், பாடகர்கள், கதையாசிரியர்கள் , உறவுகளால் கைவிடப்பட்டவர்கள்,பேச்சாளர்கள் என இரயில்
அது தொடங்கிய கொஞ்ச நேரத்தில் நம்மிடம் அறிமுகப்படுத்துகிறது அதன் ஒவ்வொரு பெட்டிகளும்...

-


25 NOV 2022 AT 22:41

கிராமப்புற சாலைகளில் ஆங்காங்கே இயற்கை முறையில் வேகத்தடைகள்...
வீட்டில் கட்டி வைத்து பராமரிக்கப் படாத கால்நடைகளால்..

-


20 JUL 2022 AT 9:05

குப்புற கவிழ்ந்த கரப்பான் பூச்சியை
அதன் இயல்பு நிலைக்கு திருப்பி விடுவதும் ஒரு வகை உயிர் காத்தல் தான்...

-


9 JUL 2022 AT 15:20

மறந்து விட வேண்டாம்.... நாமெல்லாம் பூமியின் நிலத்தில், இயற்கையின் வீட்டில், வாடகைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று....

-


13 MAR 2022 AT 20:01

மது அருந்திய சில நிமிடங்களில் சிலர் குழந்தைகள் ஆனார்கள், சிலர் ஞானி, இன்னும் சிலர் பேச்சாளர்,அறிவுரையாளர், அன்பானவர், அரிச்சந்தர் என்று ஆனார்கள். ஆனால் யாரும் அந்நேரம் மனிதராக இருக்கவில்லை.

-


1 MAR 2022 AT 19:17

நானும் அந்த பால் வழி அண்டத்தை பலமுறை அண்ணாந்து பார்த்திருக்கிறேன்... என் கனவுகளுக்கும் கண்ணுக்கும் அகப்படவே மாட்டேங்குறார் அந்த கடவுள்.

-


2 FEB 2022 AT 21:22

ஆணின் பலவீனத்தில் பதுங்கி இருக்கிறது பெண்மையின் வலிமை.....

-


Fetching Vinayaga Vicky Quotes