என்னிடம் காட்சிகளில்லை
நான் இப்போதெல்லாம்
எறும்புகளை தொடர்வதில்லை
மேகங்கள் என்னோடு
முகமுடி மாற்றுவரில்லை
பெண்களின் காதுகளின்
பின் உகுத்த வியர்வைத் துளியை
கயிராய்ப் பிடித்து மார்புவரை
ஊஞ்சாலாடுவதில்லை கண்கள்
அழும் குழந்தைகள் எரிச்சலூட்டுகின்றன் இப்போதெல்லாம், ரசிக்கும் குரூரம்
மெனபாஸ் செய்து
தன் சுழற்சியை நிறுத்திக் கொண்டது
இனி என்னிடம்
கவிதை கேட்காதீர்கள்-
அவனுக்கொரு கோப்பை
எனக்கு வேறு கோப்பை
இரண்டிலுமே அதே சாயா
ஒன்றில் கடவுள் ஒளிந்திருந்தார்
இன்னொன்றில்
அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்
தனது கொலை பற்றிய
தகவல்
ஒளிந்திருந்த கடவுளுக்கு தெரிந்திருக்கிறது
சிரட்டைகளை
கோப்பையாக சீவும் பொழுது
கடவுளின் கழுத்து
வெட்டப்பட்டிருக்கலாம்
சிரட்டை - தேங்காய் மூடி-
உன்னைச் சந்திக்கும்வரை
அனேகங்களை உன்னிடம் பேச
பொதியாய்ச் சுமந்திருந்தேன்
கவிதை கம்யூனிஸம் காமம், முத்தம்
இன்னும் ஏதேதோ
உன்னைச் சந்தித்த பின்
பொதிகள் அனாதையாய்
உன்னிடம் என்ன பேச?
அழ ஆயத்தமான உன் கண்களோடு
முத்தத்திற்காய் காத்திருக்கும்
ஜோடி உதடுகளோடு
நாசிகள் முடியும்
பளபளப்பான மடிப்புகளோடு
இத்தனை அழகான காதுகளோடு
அருகில் வந்தமர்ந்த உன்னிடம்
பேசுவதற்கேதுமில்லாமல் போனதில்
வியப்பேதுமில்லை
நான் சேகரித்து வைத்திருந்த
செல்லறித்த சொற்களில்
உனக்கான ஒரு சொல்
உனக்கான காதலென்று
ஒன்று கூட இல்லை
இதோ உன்னைப் போல மிடுக்குள்ள ஒரு பூவை நீட்டுகிறேன்
வேறெதுவுமற்ற ஏதிலியாய்,
இப்பொதைக்கு இதைப்
பெற்றுக் கொள்வாயா-
Black is full of colours
When colours are full
Its Black
Its not just a colour
Its a state
Statement
Nothing and Oblivion
Do you have a colour for Oblivion
If its not Black
Does it be the Oblivion
Black is
Crow,
Raven, Pig and Elephant
Its a rat, it's a mice
And ferocious Rottweiler too
Black sucks
Annulls
Black is porous
Permeates and prevails
Its Empty, vanishes and
Extirpate
Black will always be
Vogue, Voodoo, Viscous
and also Vampire's night
Black is chill and absolute
Honey once drunk is black
Milk and rice too
It is Solitude, and many
Its a colour and no
It is sometimes there and
Other times it is time
Time is black
And Black is Cosmos-
அரபாதம் 5000
பறவைகள் சரணாலயத்தில்
எழுதப்பட்டிருந்தது
அரபாதம் 5000
பொதுச் சொத்துக்களை
சேதப்படுத்தினால்
அரபாதம் 5000
என்று தமிழில் மட்டும்
எழுதப்பட்டிருந்தது
வெளிநாட்டவர்கள்
நுழைவுக்கட்டனம் ₹100
என்று ஆங்கிலத்தில் மட்டும்
எழுதப்பட்டிருந்தது
இந்தியர்கள் நுழைவுக்கட்டனம்
₹10.00 மட்டும்-
பழைய காதலியிடமிருந்து
ஒரு குறுஞ்செய்தி
அதன் மடிப்புகள் விரியும் முன்னே
காதல் மறுசுழற்சி அடைந்து
முத்தம் வரை ஆயத்தமாகிவிட்டது
பேங்கிகிலிருந்து இன்னொரு
குறுஞ்செய்தி வரவில்லையென்றால்
அவளை மெத்தை வரை
இழுத்து வந்திருப்பேன்
கற்பனையில்
மனைவிக்கு பழைய காதலிகள் பெயர் எல்லாம் தெரியும்
என் காமுகிக்குத்
மனைவி பெயரே தெரியாது
பழைய காதலிக்கு
காமுகி பற்றியெல்லாம் தெரியாது
இருசமக்கூறிடும் கோணம்
செங்கோணம்
இரவு ஒரு செங்கோணத்திலும்
பகல் ஒரு செங்கோணத்திலும்
சமமாய் பிளக்கப்பட்ட வாழ்வில்
காமத்தின் பாகையால்
வாழ்வு அளக்கப்படுகிறது-
கடவுளை மறுத்தார்
கடவுளை எதிர்த்தார்
தூஷித்தார்
கடவுளை உடைத்தார்
கடவுளுக்குச் செறுப்பு
மாலை அணிவித்தார்
பின் அவரே கடவுளுமானார்
துரோகிகளின் மொழியை வெறுத்தார்
காட்டு மிராண்டிகளின் மொழியை
புறக்கணித்தார்
அதே காட்டு மிராண்டிக் கூட்டத்தின்
கடவுளானார்
சிலைகளை உடைத்தார்
தானே சிலையுமானார்
கருப்பு நம் நிறம்
வேறு நிறம் அப்பியவனைத் தேடுங்கள்
உங்கள் சிலை மூடப்பழக்கம்
எங்கள் சிலை எழுச்சியின் தகைவு
கடவுள் இல்லை என்றார்
அவரே கடவுளாகும்வரை
-
ரசனையான நிறங்களால்
1 வயது குழந்தைக்குச்
செய்யப்பட்ட
ஒரு சவப்பெட்டி
ஒன்னரை அடி மட்டுமே
நீளமுள்ள குரூரத்தின் தந்தி
அதன் மேல்
வடித்திருக்கும்
தங்க மூலம் பூசிய
பேதுருவின் சிலுவை
கால்புறத்திருந்து பார்க்க
லத்தீனச் சிலுவை
ஒரு நகக் கீரல் கூட இல்லாமல்
கைகள் நடுங்காமல்
இச் சவப்ப்பெட்டி செய்தவனை
ஒரு முறை பேச அழைக்க வேண்டும்
கற்பழிக்கப் பட்ட
என் மகளின் உடலளவு
அவனுக்கு எப்படித் தெரியும்
அதே பாதிரிதான்
அளந்த விரலால்
அங்குள அளவுகளை
தச்சனுக்குச் சொல்லியிருப்பானோ
பிதாவே நீரும் தச்சந்தானே
அந்தப் பாதிரியை
உம்மிடம் ஒப்படைக்கிறோம்
-
எனக்கு கனவு வருகிறது
எனக்குக் கனவில்
வரும் அனைத்தும்
நினைவில் உள்ளது போலவே
அச்சு அசல்
அதீதங்கள் ஏதுமில்லை
எனக்குக் கனவு காணத் தெரியவில்லையா
இல்லை நான்
காண்பது கணவே இல்லையா
எழுந்த பின்
வருவதுதான் கனவா
உங்களுக்கெல்லாம் எப்படி
உறங்கிய பின் வருமா
-