எனக்கு அக்கறை காட்டி நடிக்க தெரியாது என்பார்கள்,
அன்பும்-கோவமும் கலந்ததுதான் ஆழமான உறவு,
மற்றெல்லாம் நடிப்பு..-
பொதுநலத்தின் வெளிப்பாடுதான் இயற்கை பாதுகாப்பு.
சுயநலத்தின் பிறப்பிடம்தான் ஆடம்பரம்.-
தன் செயலுக்கு தவறிழைப்பவனுக்கு
"Jail"
தன் உடலுக்கு தவறிழைப்பவனுக்கு
"Hospital"
இரண்டும் மரண தண்டனைக்கு தகும்.-
நம் சிறு வயதில் ஒன்னு மண்ணாய் திறியும் போது இந்த எண்ணம் எழுந்ததில்லை.
இன்று நீ மேலே போய்விட்டதால், நான் கீழே போய்விட்டதாக மாய பிம்பம் எழுகிறது . யோசித்தால் நான் கீழே போகவில்லை, நீ விட்டு சென்ற அதே இடத்திலே இருக்கிறேன்.-
எளிமையை "ஏழ்மை" என ஒதுக்கி,
கடன் வாங்கியாவது,
வசதி தேடிகொள்கின்றனர்.-
ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு.
- இது உயிர்சுழற்சி.
மனிதன் உருவாக்கிய கழிவு, இந்த பூமிக்கே பேரழிவு.
- இது நாற்றாண்டுக்கும் செய்ய முடியாத மறுசுழற்சி.-
அழுக்கா இருக்கிறவனால தான் இந்த பூமி அழகா இருக்கு.,
அழகா இருக்கனும்னு நினைக்கிற அவங்களாலதான் இந்த பூமி குப்பையா இருக்கு.
விவசாயி Vs ஆடம்பரவாதி
மறுக்கமுடியாத உண்மை.-
தவறுகளில் இருந்துதான் தத்துவம் பிறக்கிறது.
தன் தவறுகளை உணராதவன் ஞானி ஆகுவதில்லை.-
சூடான நேரத்தில் ஜில்லுனு தேடும்.,
குளிரான காலத்தில் சூடான இடம் தேடும் *உடலும்...
ஏழையாக இருக்கும் நேரத்தில் ஆடம்பரத்தை தேடும்.,
பணக்காரன் ஆன பின் எளிமையை தேடும்...
... *மனம் ஒரு குரங்கு !!!!-
தமையன் கோவபட்டால் வீட்டுக்கு ஆபத்து;
தலைவன் கோவபட்டால் நாட்டுக்கு ஆபத்து.
கோபத்தில் எடுக்கும் முடிவு பெரும்பாலும் ஆபத்து.-