நிர்வாணமும்
அழகுதான்
தனியறை
தாழிட்ட கதவு
நீயும் நானும்-
வேலூர் மண்ணின் மைந்தன்
படித்தது மின்னியல் மற்றும் மின்னணுவியல்
அவசரத்திற்கு
உள்ளே சென்றேன்
பின்பு
அவசர... அவசரமாய்...
வெளியே வந்தேன்
"துர்நாற்றம்"
பொதுக்கழிப்பிடம்-
இலக்கணப்பிழை
இல்லாமல்
உன் இதழின்
வரிகளை
படித்து விட்டேன்
"முத்தம்"-
உன்னை வெங்காயம் கூட
நறுக்க விடமாட்டேன்
உன் கண்களில்
கண்ணீர் வருவதால்.....
என்று கவிதையில்
எழுதி கொண்டுயிருந்தேன்
உருட்டு யா.. உருட்டு...
நல்லா உருட்டு...
என்று சொல்லிக்கொண்டே என் மனைவி பருப்பு வடைக்காக வெங்காயத்தை அரிந்து கொண்டிருந்தாள்.-
முத்தத்தின் சுவை
என்னவென்று கேட்டார்கள்?
.
.
.
சுவையற்ற சுவையே
முத்தத்தின் சுவையாகும்.
-
மீன் பிடிக்க ஆசைப்பட்டேன்
அதனால் தூண்டிலை வீசினேன்
உன் கண்களில்....-
முறை பெண்கள்
மாமா என்று அழைக்கும் போது
இதயத்தில்
ஐஸ் கட்டி
விழுந்தது போல் உணர்கிறேன்-
வீட்டுப்பாடம் முடிக்கவில்லை,
பள்ளிக்கு கிளம்பும்போது
தொலைகாட்சியில் ஓர் உடனடிச் செய்தி
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை.
"மகிழ்ச்சியில் மாணவன்"-
வீட்டில் உள்ள குப்பை எல்லாம் பொட்டலமாகக் கட்டி
தூக்கி வீசப்பட்டது முச்சந்தியில்
ஓடிவந்த தெருநாய்கள் பிரித்து மேய்ந்து
தெருவெல்லாம் போட்டுவிட்டது குப்பைகளை
துப்புரவு பணியாளர் வந்தார்
துப்பிக் கொண்டே சொன்னார்
எந்த நாய் இங்கே போட்டது என்று-
அவனது கவனம் முழுவதும் ஒன்று திரட்டினான்.
அப்படியே கையில் எடுத்தான் சிறு நடுக்கம் அவன் கையில் தென்பட்டது.
கருக்கலையாமல் வாயுக்குள் சென்றது.
கரு உடைந்தது
மிதமான சூடு, நாவின் ருசி நரம்புகளுக்கு ஒரு அற்புதமான விருந்து.
கண்களை மூடி ரசித்தான் ருசித்தான்
ஆஹா!!! என்ன சுவை
அந்த ??????
"ஹாஃப் பாயில்"-