விடிந்த காலை
மலர்ந்த மலர்
ரசிக்கும் மனம்
இவற்றில் காணும்
நிஜம்
தேடலின் ஊட்டம்.
தேடலே உன்னை
சுவாசிக்கிறேன்!-
காயமும் வலியும்
சுமக்கும்
மனதின் பலம்
குன்றியதால்
கடந்து செல்கிறேன்
அமைதியாக
அமைதியைத் தேடி.-
இளகிய
மனமாக
அன்பாக
இருத்தல்
சற்றே
சவாலானது
ஒருநாள்
வெடித்தெழும்
அபாயம்
உள்ளவரை!-
Death
-Is celebrated in some households
-Is grieved in some homes
-Is laughed amongst some people
-Is empathized at some untoward losses
whether
-a hero or a villain?!!
Death
-Is the Ruler of lives.-
Too many people,
too many incidences,
too many memories
but a too little heart!!-
மழைமேகமும்
மஞ்சள் வானமும்
மனிதர்கள்
நிரம்பிய
சாலைகளும்
மனதிற்கினிய
நினைவுகளில்
முழுமையாய்
கிரகித்துக்
கொள்கின்றன!-
உன்னைக்
காணும்
ஒவ்வொரு
நொடியிலும்
ஆழமாக
உருகியோடுகிறது
அன்பின்
வாசங்கள்
நினைவுகளென.
நிலவே!
நீயும் அன்பு தானோ?!!-
மகனி்ன்
சரிபாதியை
கண்டெடுத்த
போதிலும்
அவன்
உண்ணும்
ஒவ்வொரு
வேளையிலும்
'நல்லா சாப்பிடு பா'
என்னும்
உணர்வில்
தாய்மை
மாறாதிருக்கிறாள்!
-
இப்புவியின்
மாயைக்குள்
இலகுவாக
தன்னை உட்படுத்தி
வாழும் ஏனைய
ஜீவன்களினும்
ஏனோ!
மனிதப்பிறவி
சிக்கித் திணறும்
பிறப்பாகிப்
போயிற்றே!!-
அகண்ட வானம்
இருண்ட மழைமேகம்
மலை தொட்டு
கீழிறங்கும்
அந்தி பொழுதின்
மாய இருள்
பிரளயத்தின்
முன்மாதிரியாக
பயங்கரம்
கொள்கிறது
மனதின் ஆழத்தில்.-