உன் குருதிச் சிந்தி என் கவித் தீட்டுகிறாய்...
எப்போதும் என் விரல்களுக்கு இடையேச் சிக்கிக்கொள்கிறாய்...
என் சட்டைப்பையில் தலை நிமிர்ந்து என்னுடன் பயணிக்கிறாய்....
உன் கரம் பிடித்தபடியே நானும் என் கரம் பிடித்தபடி நீயும் இத்தனிமையை விரட்டிடுவோம் வா....
என் கருப்பு மை "பேனாவே"...!!!-
வார்த்தையை வரியாக்கி
வரியை வெளிப்படுத்தி
வெளிப்படுத்தியதை வாழ்க்கையில... read more
நாம் பார்த்த கண்ணாடியின் பிம்பம், ஒளியால் மறைந்தது....
நம் உரையாடல்கள் அனைத்தும், காற்றிலே கலைந்தது....
பயணித்த பாதையின் பாத சுவடுகள், மண்ணில் புதைந்தது....
நீயே கடந்து சென்ற போதிலும்...
ஆழமாய் வேரூன்றி நிற்பது என்னவோ.... உனது நினைவுகள் மட்டுமெ..!!-
கருப்பு /வெள்ளை கனவுகளில் எங்கிருந்தோ வந்த... வண்ண ஒளி நீ....
நீ சென்ற பிறகு தான் புரிந்தது....
ஒளியின் வேகம் அதிகமாம்.......
இப்போது கனவுகளை தேடுகிறேன்...!!
கருப்பா கலரா என்று....-
இருள் படிந்த வானிலே.... ஒளியென வந்த விண்மீனே....
நீ வந்த பிறகு தான் தெரிந்தது இந்த வானத்தின் அழகு இவ்வளவு என்று....
வந்த வேகத்தில் சென்றுவிட்டாய்!
என்னவாகுமோ விண்மீன் இல்லாத வானம்..!!
-
கானல் நீரென்றே நினைத்து எளிதில் உன்னை கடந்துவிடலாம் என்று எண்ணினேன்.....!
நீயோ திடிரென கடலாகி உன்னுள் என்னை இழுத்துக் கொண்டாய்....
தப்பவே முடியாது போல....!-
இனி எதுவுமே துணையில்லை என்று இருந்தபோது...
எட்டி பார்த்தது
உன் நினைவுகள்
நீ அணிவித்த மோதிரத்தின் வழியாக..!-
பரவாயில்லை...
கடினப்பட்டுக்கொள்ளுங்கள்!!!
தொடக்கத்தில் அடி வாங்கிய சிலை தான் தொட முடியாத உயரத்தில் ஒய்யாரமாய் இருக்கிறது....
-
முட்கள் நிறைந்த பாதை தான் எனினும்....
உன் கரம் பற்றி இருந்தால் அது பூக்கம்பலம் விரித்த பாதை தான்...
-
எங்கோ என் பிம்பம் தோன்றிய கணம்.....
உன் இதழோரம்.....
சிறு புன்னகை சிதறும் பொழுதுகளில்....
உன்னை வென்று விடுகிறது என் நினைவுகள்!!!-